பூண்டி அரங்கநாத முதலியார்

அரங்கநாத முதலியார் என்னும் தமிழறிஞர் 1837 ஆம் ஆண்டில் பூண்டியில் பிறந்தார்.[1] எனவே பூண்டி அரங்கநாத முதலியார் என அழைக்கப்பட்டார்.

கல்வி

தொகு

கணிதத்தில் கலை முதுவர் பட்டம் (Master of Arts in Mathematics) பெற்றார்.[1]

பெல்லாரி மாவட்டப் பள்ளி (Bellary Provincial School), கும்பகோணம் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் கணிதப் பேராசிரியராகவும் சென்னை மாகாண நிர்வாகத்தால் ஏற்பளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.[2]

பட்டம்

தொகு

ஆங்கில அரசாங்கத்திடம் திவான் பகதூர் பட்டம் பெற்றவர்.[1]

இயற்றிய நூல்

தொகு

கச்சிக் கலம்பகம் என்னும் நூலை இயற்றினார்.[1]

மறைவு

தொகு

1893ஆம் ஆண்டில் மறைந்தார்.[1]

சான்றடைவு

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 கந்தையா பிள்ள ந. சி., தமிழ்ப் புலவர் அகராதி: புலவர் அகர வரிசை, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் சென்னை, மு.பதிப்பு 1952, பக்.19
  2. வைத்தியநாதன் கே, தினமணி செம்மொழிக்கோவை 2010, சென்னை, பக்.275