நிலக்கொடை இயக்கம்

காந்தியம்
(பூதான் இயக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நிலக்கொடை இயக்கம் அல்லது பூமிதான இயக்கம் (பூதான்) என்பது இந்தியாவில் பெரு நில உரிமையாளர்கள், நிலம் இல்லாதோருக்கு தானாக முன்வந்து நிலம் கொடையாக அளித்தலை ஊக்குவித்த சமூக இயக்கம் ஆகும். இது இந்தியாவில் 1951 ம் ஆண்டு வினோபா பாவேவால் தொடங்கப்பட்டது. 1940களின் இறுதியில் தெலுங்கானா பகுதிகளில் இந்திய பொதுவுடமைக் கட்சி ஆயுதமேந்திய கிளர்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தது. நிலமற்ற ஏழை விவசாயிகளின் ஆதரவு இந்த கிளர்ச்சிக்கு பெருவாரியாக இருந்தது. இந்தப் புரட்சியை அடக்க மாநில மற்றும் நடுவண் அரசாங்கள் கடுமையான முறைகளைக் கையாண்டன. அப்போது வினோபா பாவே நிலமின்மையால் தான் மக்கள் ஆயுதமேந்திப் போராடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள், அரசிடமிருந்து இவர்களுக்கு நிலம் கிடைக்கப்படுவோதில்லை, இச்சிக்கலைத் தீர்க்க நிலமுடையவர்களே முன்வந்து நிலக்கொடையளிக்க வேண்டுமென்று வேண்டினார். இதை ஒப்புக்கொண்டு பலரும் நிலம் தானம் செய்ய முனவரவே, இது ஒரு பெரிய இயக்கமாக உருவானது.

வினோபா பாவே இந்தியாவெங்கும் பயணம் செய்து நிலக்கொடை இயக்கத்துக்காக பிரச்சாரம் செய்தார். அவருடைய் சர்வோதயா ஆசிரமம் இவ்வியக்கத்தை ஒருங்கிணைத்து நடத்தியது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இவ்வியக்கத்தால் கொடையாக சேகரிக்கப்பட்டன. ஆனால் எதிர்பார்த்த இலக்கை இவ்வியக்கத்தால் அடையமுடியவில்லை. மேலும் இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிலங்கள், தற்காலம் வரை முழுவதுமாக நிலமற்றவர்களுக்கு பிரித்தளிக்கப்படவில்லை.

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலக்கொடை_இயக்கம்&oldid=3438085" இலிருந்து மீள்விக்கப்பட்டது