பூத கணங்கள்
பூத கணங்கள் என்பவை இந்து தொன்மவியலில் குறிப்பிடப்படுகின்ற பதினெண் கணங்களில் ஒரு கணம் ஆவார். இந்த பூத கணங்கள் சிவபெருமானுடைய சேவர்களாக கயிலை மலையில் இருப்பதாக சித்தரிக்கப்படுகிறது. பூதகணங்கள் சிவபெருமானின் பல்வேறு வடிவங்களோடு இணைந்து வருகிறது.
சிவாலயங்களில் பூத கணங்கள் தனி வரிசையாக செதுக்கப்படுகின்றன. அவ்வாறு செதுக்கப்படும் பூத கணங்கள் குறும்பு செய்பவைகளாகவும், இசை கருவிகளை வாசித்து, நடனமாடுபவைகளாகவும் உள்ளன. சில சிவாலயங்களில் பூதங்கள் திருச்சுற்று சுவரின் மீது அமைக்கப்படுகின்றன.
ஆலயங்களில் சிற்ப வரிசை
தொகுசிவாலயங்களின் கட்டிட அமைப்பில் கூரைப்போன்ற அமைப்பினை தாங்கியவாறு பூத வரிசை என்பது அமைக்கப்படுகிறது. இந்த சிற்பங்களில் பல்வேறு வகையான பூதகணங்கள் சிற்பங்களாக செதுக்கப்படுகின்றன.
இவ்வாறான பூத வரிசையில் புலியின் முகம், கழுகின் முகம் ஆகியவற்றை வயிற்றில் வரைந்த பூதகணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவ்வாற பூதங்களை புலித்தொப்பை பூதங்கள், கழுகுத் தொப்பை பூதங்கள் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். லால்குடி சிவாலயத்தில் இவ்வாறான புலித்தொப்பை, கழுகுத் தொப்பை பூதகனங்கள் இருக்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Dictionary of Hindu Lore and Legend (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-51088-1) by Anna L. Dallapiccola
வெளி இணைப்புகள்
தொகு- The Ganas: Hooligans of Heaven பரணிடப்பட்டது 2008-01-26 at the வந்தவழி இயந்திரம்