பூத வாகனம்
பராய்துறைநாதர் சிவாலயத்தில் உள்ள பூதவாகனம்
பராய்துறைநாதர் சிவாலயத்தில் உள்ள பூதவாகனம்
உரிய கடவுள்: சிவபெருமான்
இணையர்: பூதகி

பூத வாகனம் என்பது என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சிவபெருமான் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும்.[1] சிவபெருமானை தாங்கி வருகின்ற பூதரை மகாகாயன் என அழைக்கின்றனர்.

சிவ கணங்களில் ஒன்றாக பூத கணங்கள் உள்ளன. அதனால் பூதகணங்கள் சிவபெருமானை வணங்கி வழிபடுகின்றன. இதனைக் குறிப்பதற்காக பூத வாகனத்தில் சிவபெருமான் ஊர்வலம் செல்கிறார்.

இவ்வாறு பூத வாகனத்தில் சிவபெருமான் ஊர்வலம் வருதலை பூத வாகன சேவை என்று அழைக்கின்றனர்.

பூதகி வாகனம் தொகு

ஆண் பூதத்திற்கு இணையான பெண் பூத வாகனம் சில கோயில்களில் உள்ளது. இதனை பூதகி வாகனம் என்பர். அம்மனை தாங்கி வரும் பூதத்தினை பிரம்ம தேஹினி என்கின்றனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவில், பரமக்குடி முத்தாலம்மன் கோயில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் போன்றவற்றில் பூதகி வாகனத்தில் அம்மன் உலா வருகிறார்.

வாகன அமைப்பு தொகு

பராய்துறைநாதர் சிவாலயத்தில் உள்ள பூதவாகனத்தின் இடையளவுத் தோற்றம்

பூத வாகனம் என்பது அகன்ற கண்களும், கோரைப் பற்களும், பெரிய தொப்பையும் கொண்டும், இடக்காலை மண்டியிட்டு, வலக்காலை தாங்கியபடியும் அமைக்கப்பட்டுள்ளது. இரு கைகள் கொண்டதும், நான்கு கைகள் கொண்டதுமாக பூதங்கள் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு கைகள் கொண்ட பூத வாகனம் கைகளை ஏந்தியபடியும், நான்கு கைகள் கொண்ட பூத வாகனம் கைகளில் கதை, வாள் முதலிய ஆயுதங்களை தாங்கியவாறும் உள்ளது.

ஆதாரங்கள் தொகு

  1. வைணவத் தலங்களில் கொடியேற்றம்: 2-ம் நாளில் 1.50 லட்சம் பக்தர்கள் திரண்டனர்

காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூத_வாகனம்&oldid=3696419" இலிருந்து மீள்விக்கப்பட்டது