பூபதிராஜு விஜயகுமார் ராஜு

இந்திய அரசியல்வாதி

பூபதிராஜு விஜயகுமார் ராஜு ( Bhupathiraju Vijayakumar Raju) (பிறப்பு 17 செப்டம்பர் 1936) ஓர் அரசியல்வாதியும், தொழிலதிபரும் ஆவார். மேலும், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள வேந்திரா என்ற கிராமத்தில் 1975 இல் நிறுவப்பட்ட டெல்டா காகித ஆலையை நிறுனினார்.

பூபதிராஜு விஜயகுமார் ராஜு భూపతిరాజు విజయకుమార్ రాజు
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1984-89, 1989-91, 1991-94
முன்னையவர்சுபாசு சந்திர போசு அல்லூரி
பின்னவர்கொத்தப்பள்ளி சுப்பாராயுடு
தொகுதிநரசாபுரம்
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1967 -72, 1972 - 77
முன்னையவர்நாச்சு வெங்கட ராமையா
பின்னவர்கலிதிண்டி விஜயகுமார் ராஜு
தொகுதிபீமவரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1936-09-17)17 செப்டம்பர் 1936
மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
இறப்பு20 நவம்பர் 1994(1994-11-20) (அகவை 58)
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்காந்தா கமலா கஸ்தூரி (தி. 1954)
பெற்றோர்
  • சுப்பா தத்த ராஜு (father)
வாழிடம்(s)சிறீ ராமாபுரம், பிமவரம்
As of Apr, 2014

அரசியல் வாழ்க்கை தொகு

விஜயகுமார் ராஜு 1967-72ல் பீமவரம் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாகவும், 1972-77 இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினராகவும் இருந்தார்.

இவர் இந்தியாவின் எட்டாவது மக்களவை, ஒன்பதாவது மக்களவை மற்றும் பத்தாவது மக்களவை உறுப்பினராக இருந்தார். தொடர்ந்து 3 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [தெலுங்கு தேசம் கட்சி|தெலுங்கு தேசம் கட்சியின்]] உறுப்பினரான இவர் ஆந்திரப் பிரதேசத்தின் நரசாபுரம் மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

இவரும் இவரது சக கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறி 1992 ல் சிறுபான்மை காங்கிரசு அரசாங்கத்தை காப்பாற்ற பி.வி.நரசிம்மராவுக்கு வாக்களித்தனர். இதன் காரணமாக என். டி. ராமாராவின் கோபத்திற்கு ஆளாகினர்.[2] [3]

மேற்கோள்கள் தொகு

  1. Partywise Comparison http://eci.nic.in/eci_main/electionanalysis/GE/PartyCompWinner/S01/partycomp10.htm
  2. Upendra and five other MPs out of TDP was the trust vote in favour of the then Prime Minister Narasimha Rao http://zeenews.india.com/news/nation/former-union-minister-p-upendra-passes-away_579530.html
  3. "Members Bioprofile - BHUPATHIRAJU, SHRI VIJAYA KUMAR RAJU". loksabha. பார்க்கப்பட்ட நாள் 10 April 2018.