பூபதி கேடயப் பாம்பு
பூபதி கேடயப் பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | யூரோபெல்டிசு
|
இனம்: | யூ. பூபதி
|
இருசொற் பெயரீடு | |
யூரோபெல்டிசு பூபதி ஜின்சு, சாம்பையோ, & கோவர், 2018[2] | |
வேறு பெயர்கள் [3] | |
யூரோபெல்டிசு எல்லியோடி |
பூபதி கேடயப் பாம்பு என்று அழைக்கப்படும் யூரோபெல்டிசு பூபதி (Uropeltis bhupathyi) என்பது யூரோபெல்டிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினமாகும்.[4][5] இந்தச் சிற்றினம் தென்னிந்தியாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகிறது.[6]
சொற்பிறப்பியல்
தொகுஇந்தியத் தாவரவியலாளரும் உயிரியலாளருமான சுப்பிரமணியன் பூபதி நினைவாக யூ. பூபதி என்று இந்தப் பாம்பிற்குப் பெயரிடப்பட்டுள்ளது.[7]
பரவல்
தொகுஇந்தச் சிற்றினம், இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், இதுவரை தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி மலைகளில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.[8][9][10][11]
விளக்கம்
தொகுயூ. பூபதி, நச்சற்ற வளைகளில் வாழும் பாம்பு ஆகும். பொதுவாக இவை மண்புழுக்களை உணவாகக் கொள்கின்றன. இப்பாம்பு 200க்கும் மேற்பட்ட வயிற்றுப்புறச் செதில்களையும் 17 முதுகுப்புறச் செதில் வரிசைகளை நடுப்பகுதியில் கொண்டுள்ளது.[12][13] இதன் வால் குறுகியது சாய்வானது. இது இணைப்புடைய் செதில்களைக் கொண்டுள்ளது. இது அடர் பழுப்பு நிறத்தில், கழுத்து மற்றும் வாலின் இருபுறமும் மஞ்சள் கோடுகளுடன் காணப்படும். இது உலோகம் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்தச் சிற்றினம் மிதமான வளர்ச்சியடைந்த வால் கவசத்தைக் கொண்டுள்ளன. முனைய உடற் செதில் அகலமானது; 8-10 எண்ணிக்கையிலானது.[14]
இதன் உடல் நீளம் சுமார் 40 செமீ வரை வளரும்.[15]
காப்பு நிலை
தொகுஇந்தச் சிற்றினம் வாழ்விட இழப்பால் அபாயத்தை எதிர்கொள்கின்றன. சாலைப் போக்குவரத்து மற்றும் பூச்சிக்கொல்லிகளால் இது பாதிக்கப்படுகிறது.[16] வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவும் பாம்பு பூஞ்சை நோயை நினைவூட்டும் வகையில், இதன் தலையைச் சிதைக்கும் ஒரு நிலையாலும் பாதிக்கப்படலாம்.[17]
மேற்கோள்கள்
தொகு- ↑ "New species of shieldtail snake discovered in Western Ghats".
- ↑ "ITIS - Report: Uropeltis bhupathyi".
- ↑ "Uropeltis bhupathyi".
- ↑ "ZooBank.org". zoobank.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
- ↑ "ITIS - Report: Uropeltis bhupathyi". www.itis.gov. பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
- ↑ "Uropeltis bhupathyi Jins, Sampaio & Gower, 2018 | Species". India Biodiversity Portal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
- ↑ "New species of shieldtail snake discovered in Western Ghats". www.downtoearth.org.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
- ↑ "Uropeltis bhupathyi". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
- ↑ "Zootaxa".
- ↑ "ResearchGate".
- ↑ "Uropeltis bhupathyi Jins, Sampaio & Gower, 2018 | Species". India Biodiversity Portal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
- ↑ Pskhun (2018-05-01). "Species New to Science: [Herpetology • 2018] Uropeltis bhupathyi • A New Species of Uropeltis Cuvier, 1829 (Serpentes: Uropeltidae) from the Anaikatty Hills of the Western Ghats of India". Species New to Science. பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
- ↑ "Uropeltis bhupathyi". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
- ↑ "Uropeltis bhupathyi Jins, Sampaio & Gower, 2018 | Species". India Biodiversity Portal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
- ↑ Perinchery, Aathira (2018-05-03). "New snake found in Western Ghats" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/new-snake-found-in-western-ghats/article23763921.ece.
- ↑ "Scientists describe new species of shieldtail snakes found in Anaikatti hills". Mongabay-India (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-07-05. பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
- ↑ "New species of shieldtail snake discovered in Western Ghats". www.downtoearth.org.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.