பூபேந்திர நாத் போசு
பூபேந்திர நாத் போசு (Bhupendra Nath Bose) (1859 சனவரி 13 - 1924 செப்டம்பர் 13) இவர் ஓர் இந்திய அரசியல்வாதியாகவும் மேலும்,1914இல் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் இருந்தார்.
பூபேந்திர நாத் போசு | |
---|---|
கொல்கத்தாவின் மோகன் பாகன் கால்பந்து சங்கத்தின் முதல் தலைவர் | |
கல்கத்தா பல்கலைக்கழக துணைவேந்தர், பி.என்.பாசு மற்றும் நிறுவனம் (சட்ட நிறுவனம்) (நிறுவனர்) | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1859 சனவரி 13 இராதாநகர், ஹூக்லி, மேற்கு வங்கம் |
இறப்பு | 1924 செப்டம்பர் 13 |
அரசியல் கட்சி | 1914 இல் மெட்ராஸ் அமர்வில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் |
ஆரம்ப வாழ்க்கை
தொகுபோசு 1859 இல் மேற்கு வங்காளத்தின் இராதாநகரில் பிறந்தார். 1880இல் கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1881இல், இவர் தனது முதுகலை பட்டத்தையும் மற்றும் சட்டப் பட்டத்தையும் முடித்தார். பின்னர், இவர் பி.என். பாசு அண்ட் கம்பெனி என்ற சட்ட நிறுவனத்தை நிறுவினார். அதன் அலுவலகம் இன்றும் கொல்கத்தாவின் ஹூக்லி மாவட்டத்தில் உள்ளது
பணிகள்
தொகு1904 முதல் 1910 வரை போசு வங்காள சட்டமன்றதின் உறுப்பினராக இருந்தார். இந்த காலகட்டத்தில், இவர் தேசியவாத இயக்கத்தில் ஈடுபட்டார். 1905இல் மைமன்சிங்கில் நடைபெற்ற வங்காள மாகாண மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். இவர் பிரிவினைக்கு எதிரான போராட்டத்திலும், வங்காளம் முழுவதும் பிரிட்டிசு பொருட்களுக்கு எதிரான பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். பின்னர், 1907ஆம் ஆண்டில், இவர் தேசியவாத நடவடிக்கைகளுக்காக கொல்கத்தாவில் பிரிட்டிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். [1] 1910இல் பத்திரிகைச் சட்டம் நிறைவேற்றப்படுவதை இவர் எதிர்த்தார்.
போசு 1917 முதல் 1923 வரை இந்திய வெளியுறவுத்துறை செயலாளரின் உறுப்பினராகவும், அதில் சார்பு செயலாளராகவும் இருந்தார். 1923இல் இவர் வங்காள ஆளுநரின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார். கொல்கத்தாவின் மோகன் பாகன் கால்பந்து சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். [2]
இறப்பு
தொகுபூபேந்திர நாத் போசு 1924 இல் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Raja Subodh Chandra Mallik and his times by அமலெந்து டே, National Council of Education, Bengal - Page 96, 1996
- ↑ Mohun Bagan History பரணிடப்பட்டது 24 பெப்பிரவரி 2008 at the வந்தவழி இயந்திரம்