பூமா நாகி ரெட்டி
பூமா நாகி ரெட்டி ( Bhuma Nagi Reddy ; 8 ஜனவரி 1964– 12 மார்ச் 2017) ஒரு இந்திய அரசியல்வாதியாவார். கர்நூல் மாவட்டத்தில் உள்ள அல்லகட்டா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இவரது சகோதரர் பூமா சேகர் ரெட்டியின் திடீர் மரணத்திற்குப் பிறகு, 1992 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 1996 இல், நந்தியால் மக்களவைத் தொகுதித் தேர்தலில் முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக ரெட்டி இருந்தார். இவர் பதினொராவது மக்களவை, 12 மற்றும் 13வது மக்களவைகளில் பணியாற்றினார். [3]
பூமா நாகி ரெட்டி | |
---|---|
2012இல் பூமா நாகி ரெட்டி | |
பிறப்பு | கொத்தபள்ளி, கர்நூல் மாவட்டம் | சனவரி 8, 1964
இறப்பு | மார்ச்சு 12, 2017 அல்லகட்டா | (அகவை 53)
பணி | அரசியல்வாதி |
செயற்பாட்டுக் காலம் | 1984-2017 |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி[1] (until 2009)(2016 - 2017) |
வாழ்க்கைத் துணை | சோபா நாகி ரெட்டி (தி. 1986-2014) |
நாகி ரெட்டி 1996-1997 இல் நிதி மற்றும் வெளிவிவகாரக் குழுக்களில் உறுப்பினராக இருந்தார். 1998-1999ல் போக்குவரத்து மற்றும் சுற்றுலாக் குழுவிலும், உறுப்பினர்களுக்கு கணினி வழங்கும் குழுவிலும், இரசாயனம் மற்றும் உர அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். நாகி ரெட்டி 1999 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் எரிசக்திக் குழுவின் உறுப்பினராகவும், 2000 முதல் 2004 வரை நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.[4]
இறப்பு
தொகுநாகி ரெட்டி தனது 53 வது வயதில் 12 மார்ச் 2017 அன்று தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு சோபா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "TDP MLA Bhuma Nagi Reddy dies of massive heart attack". 12 March 2017.
- ↑ "Archived copy". www.parliamentofindia.nic.in. Archived from the original on 18 August 2004. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Biographical Sketch of Member of 13th Lok Sabha". Archived from the original on 7 September 2006.
- ↑ "Archived copy". parliamentofindia.nic.in. Archived from the original on 15 March 2017. பார்க்கப்பட்ட நாள் 22 May 2022.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Parliament of India". Parliament of India. பார்க்கப்பட்ட நாள் 2017-03-14.