பூரன் பாட்

இந்திய கைப்பாவைக் கலைஞர்

பூரன் பாட் (Puran Bhaat) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கைப்பாவை கலைஞராவார். ராசத்தானில் இருந்த இவரது கைப்பாவை குடும்பங்களின் குழு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் குடியேறியது. இக்குழுவினர் தற்போது தில்லியிலுள்ள கத்புட்லி காலனியில் ஒரு கலைஞர் சமூகமாக வசிக்கின்றனர். [1]

2004 ஆம் ஆண்டு அக்டோபர் 2004 அன்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் கைப்பாவை கலைக்காக சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்ற பூரன் பாட்டின் உருவப்படம்

இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாதமியான சங்கீத நாடக அகாடமி 2003 ஆம் ஆண்டில் இவருக்கு சங்கீத நாடக அகாதமி விருதை வழங்கி சிறப்பித்தது. [2]

புது தில்லியின் புறநகரில் வானளாவிய உயரமான வீடுகளைக் கட்டும் பொருட்டு வரவிருக்கும் வெளியேற்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் கத்புட்லி காலனியை மையமாகக் கொண்ட 2014 ஆம் ஆண்டு உருவான ஆவணப்படமான நாளை நாம் காணாமல் போவோம் என்ற ஆவணப்படத்தில் பாட் முதன்மையான பாத்திரமாக இருந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. Daftuar, Swati (21 February 2014). "With strings attached". The Hindu. https://www.thehindu.com/features/metroplus/with-strings-attached/article5713395.ece. பார்த்த நாள்: 18 January 2019. 
  2. "SNA: List of Akademi Awardees". Sangeet Natak Akademi Official website. Archived from the original on 2015-05-30.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூரன்_பாட்&oldid=3222258" இலிருந்து மீள்விக்கப்பட்டது