பூர்ணமசி ராம்

இந்திய அரசியல்வாதி

பூர்ணமசி ராம் (Purnmasi Ram) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1950 ஆம் ஆண்டு சனவரி மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1990 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து முறை பீகார் சட்டமன்றத்திற்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டில் 15 ஆவது மக்களவைக்கும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி குல்ரேசு ஓடாவுடன் இணைந்து புதிய அரசியல் கட்சியான இயன் சங்கர்சு தளம் கட்சியைத் தொடங்கினார். பீகாரில் தலித்துகள் மற்றும் முசுலிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்த இக்கட்சி முயல்கிறது. [2]

பூர்ணமசி ராம் 1950 ஆம் ஆண்டு சனவரி மாதம் 5 ஆம் தேதி இந்தியாவின் பீகார் மாநிலத்தில் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள நராய்பூர் கிராமத்தில், மோகர் ராம் மற்றும் சினிகி தேவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். சார்க்கண்டு மாநிலத்தின் தியோகரில் உள்ள வித்யாபீத் பள்ளியில் கல்வி பயின்றார். இப்பள்ளியில் மெட்ரிகுலேசன் வரை படித்து முடித்தார். [3]

பூர்ணமசி ராம் பீகார் சட்டமன்றத்திற்கு தொடர்ச்சியாக ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார், முதலில் 1990 ஆம் ஆண்டில் இவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. இவரது முதல் பதவிக் காலத்தில் 1990-1995 ஆம் ஆண்டுகளில் இவர் மாநில அமைச்சராக இருந்தார். 1995 முதல் 2005 வரையிலும், 2005 முதல் 2009 வரையிலான காலப்பகுதிகளில் அமைச்சரவையில் ஓர் அமைச்சராகவும், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பான குழுவின் தலைவராகவும் இருந்தார். 2009 ஆம் ஆண்டில், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பூர்ணமசி ராம் காந்தி தேவியை 1968 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி மணந்தார். இவர்களுக்கு அச்சய், விச்சய் என்ற இரண்டு மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர். [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Members Bioprofile". பார்க்கப்பட்ட நாள் 17 October 2014.
  2. "Ex-IAS officer, dalit leader join hands to form new political party in Bihar".
  3. 3.0 3.1 "Detailed Profile: Shri Purnmasi Ram". பார்க்கப்பட்ட நாள் 17 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்ணமசி_ராம்&oldid=3844013" இலிருந்து மீள்விக்கப்பட்டது