பூவரசங்குப்பம் இலட்சுமி நரசிம்மர் கோயில்

இலட்சுமி நரசிம்மர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் பூவரசங்குப்பம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1][2]

பூவரசங்குப்பம் இலட்சுமி நரசிம்மர் கோயில்
பூவரசங்குப்பம் இலட்சுமி நரசிம்மர் கோயில் is located in தமிழ் நாடு
பூவரசங்குப்பம் இலட்சுமி நரசிம்மர் கோயில்
பூவரசங்குப்பம் இலட்சுமி நரசிம்மர் கோயில்
ஆள்கூறுகள்:11°51′00″N 79°34′52″E / 11.8499°N 79.5812°E / 11.8499; 79.5812
பெயர்
வேறு பெயர்(கள்):தட்சிண அகோபிலம்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:பூவரசங்குப்பம்
சட்டமன்றத் தொகுதி:விழுப்புரம்
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
ஏற்றம்:47.53 m (156 அடி)
கோயில் தகவல்
மூலவர்:இலட்சுமி நரசிம்மர்
தாயார்:அமிர்தவல்லி
குளம்:சக்கர தீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி,
நரசிம்மர் ஜெயந்தி,
வைகாசி விசாகம்,
தமிழ் வருடப் பிறப்பு,
தை மாத தீர்த்தவாரி,
புரட்டாசி சனிக்கிழமைகள்
உற்சவர்:பிரகலாத வரதன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று
வரலாறு
கட்டிய நாள்:கி.பி. ஏழாம் நூற்றாண்டு
அமைத்தவர்:பல்லவ மன்னன்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 47.53 மீட்டர் உயரத்தில், 11°51′00″N 79°34′52″E / 11.8499°N 79.5812°E / 11.8499; 79.5812 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இக்கோயில் அமையப் பெற்றுள்ளது.

தட்சிண அகோபிலம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மூலவர் இலட்சுமி நரசிம்மர் மற்றும் தாயார் அமிர்தவல்லி ஆவர். உற்சவர் பிரகலாத வரதன் ஆவார். இக்கோயிலின் தலவிருட்சம் நெல்லி மரம் ஆகும். தீர்த்தம் சக்கர தீர்த்தம் ஆகும். இக்கோயிலில் பஞ்சராத்ர முறைப்படி பூசைகள் செய்யப்படுகின்றன. வைகுண்ட ஏகாதசி, நரசிம்மர் ஜெயந்தி, வைகாசி விசாகம், தமிழ் வருடப் பிறப்பு, தை மாத தீர்த்தவாரி, புரட்டாசி சனிக்கிழமைகள் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.[3]

நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2023ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் வாரத்தில், இக்கோயிலின் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. மாலை மலர் (2016-10-31). "பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் கோவில்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-11.
  2. "கடன் தொல்லையை போக்கும் லட்சுமி நரசிம்மர் விரதம்". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-10-11.
  3. "Lakshmi narasimhar Temple : Lakshmi narasimhar Lakshmi narasimhar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-11.
  4. தினத்தந்தி (2023-07-01). "பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ விழா". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-11.
  5. சிவரஞ்சித் (2023-07-08). "150 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டம்". tamil.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-11.

வெளி இணைப்புகள்

தொகு