பூவா தலையா (2011 திரைப்படம்)
பூவா தலையா என்பது 2011 ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இப்படத்தை சஞ்சய் ராம் தயாரித்து, இயக்கியுள்ளார். இந்த படத்தில் கிருஷ்ணகுமார், உதயா, வாலி, செரின் ஷிரிங்கர், மேகா நாயர் ஆகியோர் நடித்துள்ளர். இந்த படம் இந்தியாவில் 29 ஏப்ரல் 2011 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
பூவா தலையா | |
---|---|
இயக்கம் | சஞ்சய் ராம் |
தயாரிப்பு | சஞ்சய் ராம் |
கதை | சஞ்சய் ராம் |
இசை | சத்தியா |
நடிப்பு |
|
கலையகம் | லிங்கம் திரேட்டர்ஸ் |
வெளியீடு | 29 ஏப்ரல் 2011 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
தொகு- கிருஷ்ணகுமார்
- உதயா
- வாலி
- செரின் ஷிரிங்கர்
- மேகா நாயர்
- ஸ்வேதா
- தீபன் சக்கரவர்த்தி
- தண்டபாணி
- அலெக்ஸ்
தயாரிப்பு
தொகுபுதுமுகம் கிருஷ்ணகுமார் முன்னணி பாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் உதயா, சஞ்சய் ராமின் நெருங்கிய நண்பர் வாலி இப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.[1][2] 2008 ஆகத்து 15 க்குள் வெளியிடத் தயாராக இருந்தது, ஆனால் பின்னர் பட வெளியீடு தாமதமானது.[3][4]
இப்படத்தை தயாரிப்பதாக இருந்த பாலு போத்தான், ராம் பிரகாசு ஆகியோரை மாற்றி சஞ்சய் ராமே தயாரிப்பில் ஈடுபட்டார். படம் வெளியாவதற்கு முன்பு, ஷெரின் தான் சம்பந்தபட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிக்கப்படவில்லை என்றும், இயக்குநர் மாறுபட்ட திரைக்கதையுடன் படத்தை வெளியிட முயற்சிப்பதாகவும் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். தயாரிப்பாளர் சஞ்சய் ராம் அவர் "மோசமாக நடித்தார்" என்று கூறினார்.[5]
வெளியீடு
தொகுபடம் 2011 ஏப்ரல் 29 அன்று வெளியிடப்பட்டது. வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. நவ்ரன்னிங் எழுதிய விமர்சனத்தில், "பூவா தலையா என்பது கொலைக் கலையைத் திட்டமிட்டு செயல்படுத்தும் மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு மோசமான கோரமான குண்டர் படம்." என்றது.[6]
குறிப்புகள்
தொகு- ↑ "Udhaya bounces back - Tamil News". IndiaGlitz.com. 5 October 2010.
- ↑ "Sherin is back - Tamil News". IndiaGlitz.com. 22 August 2008.
- ↑ "August release schedule". Sify. Archived from the original on 2019-08-06.
- ↑ "POOVA THALAIYA MOVIE GALLERY - Behindwoods.com - Krishnakumar Udhaya Sherin Megha Nair Swetha Direction Sanjairam Production Balu Poththan Ram Prakash Music Peter John gallery wallpaper stills image gallery Tamil Movie Gallery Tamil Movie Stills". www.behindwoods.com.
- ↑ "Producer has played dirty: Sherin - Times of India". The Times of India.
- ↑ "Poova Thalaiya Review - Poova Thalaiya Tamil Movie Review by Rohit Ramachandran". NOWRUNNING.