பூ. அருணாசலம்

பூ. அருணாசலம் (புனைபெயர் பூவன்னா, பிறப்பு: 1937, மறைவு 22.6.2017 ) கூட்டுறவு நிறுவன அலுவலர். மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். கலாசாலைமணி, தொண்டர்மணி, அருந்தமிழரசன் என்னும் பட்டங்கள் பெற்றவர். 1961 இல் சிங்கப்பூரில் நடைபெற்ற பன்மொழி எழுத்தாளர் மாநாட்டில் மலேசியாவிலிருந்து கலந்து கொண்ட ஒரே தமிழ் எழுத்தாளர். பல சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதி பரிசுகள் பல பெற்றுள்ளார்.

பூ. அருணாசலம்

எழுத்துலக வாழ்வு

தொகு

1956 இல் எழுத்துலகில் பிரவேசித்தார். 1961 - 1964´இல் 15 எழுத்தாளர்களை ஒன்றிணைத்து சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டு சாதனை படைத்தார்.

'பூக்காமல் போகுமா பூ' மற்றும் 'மஞ்சள் குங்குமம்' என்ற இவரது நாவல்கள் சிங்கப்பூர் வானொலியில் நாவல் நாடகத்தொடராக இருமுறை ஒலியேற்றம் கண்டன. 'பௌர்ணமி நிலவில்' என்ற நாவல் தமிழ் நேசனில் ஞாயிறு வாரத்தொடராக வெளியிடப்பட்டது.

பரிசுகள்

தொகு
  • 1961 இல் சிங்கை கலாச்சார அமைச்சு நடத்திய நான்குமொழி நாடகப்போட்டியில், தமிழ்ப் பிரிவில் இவரது 'துரோகி' என்ற தமிழ் நாடகம் முதல் பரிசினைப் பெற்றது.

விருதுகள்

தொகு
  • 1971 இல் மாமன்னரிடமிருந்து PPN விருது பெற்றார்.
  • 1981 இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் விருது பெற்றார்.

வெளிவந்த நூல்கள்

தொகு
  • வரலாற்றில் ஒரு மாமனிதர் - (துன் சம்பந்தன் பற்றிய கட்டுரைத் தொகுப்பு)
  • சமுதாய வீதி - (கட்டுரைகள்)
  • கும்பிட்ட கரங்கள் - (சிறுகதைகள்)
  • ஒரு தேசத்தின் சரித்திர மகன் - (மலாயாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் பற்றிய கட்டுரைத் தொகுப்பு)
  • பூவோ பூ

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூ._அருணாசலம்&oldid=4014518" இலிருந்து மீள்விக்கப்பட்டது