பெங்களூரு திருவள்ளுவர் சிலை

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரின் அல்சூர் ஏரிக்கு அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை
(பெங்களூரு திருவள்ளுவர் சிலைப் பிரச்சினை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெங்களூரு திருவள்ளுவர் சிலை என்பது கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூர் நகரின் அல்சூர் ஏரிக்கு அருகில் அமைந்துள்ள திருவள்ளுவரின் சிலை ஆகும்.

வரலாறு

தொகு

பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முயற்சியால் பெங்களூரு மாநகராட்சியின் அனுமதியுடன் ஒரு திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. இச்சிலையை அப்போதைய கர்நாடக முதலமைச்சரான பங்காரப்பா 1991ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் திறந்துவைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவ்வூரில் உள்ள கன்னட அமைப்புகளின் எதிர்ப்பினாலும், அவர்கள் தொடுத்த வழக்காலும் அச்சிலை திறக்கப்படாமல் சாக்குப்பைகளால் மூடப்பட்டு இருந்தது; உணர்மிகு பிர்ச்சினை என்பதால் தொடர்ச்சியாக காவலர் பாதுகாப்பும் இருந்துவந்தது. 18 ஆண்டுகள்[1] நீடிந்த இந்த சிக்கலுக்கு தீர்வுகாண கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியுடன் நிகழ்த்திய பேச்சைத் தொடர்ந்து இச்சிலையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கன்னட அமைப்புகள் விடுத்த கோரிக்கையை அடுத்து நல்லெண்ண அடிப்படையில் சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் சிலை நிறுவப்பட்டு திறக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் திருவள்ளுவருக்கு புதிய வெண்கல சிலையை தயாரித்து பழைய சிலையை நீக்கி அங்கு நிறுவியது. இதையடுத்து 2009 ஆகத்து 9 அன்று நடந்த விழாவில் பங்காரப்பா முன்னிலையில் தமிழக முதல்வர் மு. கருணாநிதி சிலையைத் திறந்துவைத்தார். இச்சிலை திறப்புக்கு எதிராக கன்னட அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தன, என்றாலும் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறக்கவைத்து மகிழ்ந்தவர் கருணாநிதி!". செய்தி. தினமணி. 9 ஆகத்து 2018. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பெங்களூர் திருவள்ளுவர் சிலை-கருணாநிதி திறந்து வைத்தார்". செய்தி. tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)