பெங்களூர் நகர மண்டபம்

பெங்களூரில் உள்ள ஒரு கட்டடம்

பெங்களூர் நகர மண்டபம் (Bangalore Town Hall) அல்லது சர் கே. பி. புட்டண்ணா செட்டி நகர மண்டபம் என்பது இந்தியாவின், கருநாடகத்தின், பெங்களூரில் உள்ள ஒரு பாரம்பரிய நகர மண்டபம் ஆகும். இதற்கு பெங்களூர் நகர நகராட்சித் தலைவரும், வள்ளளுமான சர் கே. பி. புட்டண்ண செட்டியின் பெயர் இடப்பட்டது.

பெங்களூர் நகர மண்டபம்
2010 இல் நகர மண்டபம்
Map
மாற்றுப் பெயர்கள்சர் கே. பி. புட்டண்ணா செட்டி நகர மண்டபம்
பொதுவான தகவல்கள்
வகைநகர மண்டபம்
கட்டிடக்கலை பாணிநியோகிளாசிக்கல் கட்டிடக்கலை
இடம்பெங்களூர்
கருநாடகம்
இந்தியா
முகவரி112 ஜே. சி. சாலை, பெங்களூர்
கருநாடகம்
ஆள்கூற்று12°57′29″N 77°35′00″E / 12.9581°N 77.5833°E / 12.9581; 77.5833
கட்டுமான ஆரம்பம்6 மார்ச் 1933
நிறைவுற்றது11 செப்டம்பர் 1935
புதுப்பித்தல்மார்ச் 1990
செலவுரூ 175,000 (பணவீக்கத்திற்கு ஏற்ப மதிப்பு சரிசெய்யப்படவில்லை)
உரிமையாளர்பெரிய பெங்களூர் மாநகரப் பேரவை
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை2
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)எஸ். லட்சுமிநரசப்பா
குடிசார் பொறியாளர்சர் மிர்சா இஸ்மாயில்
முதன்மை ஒப்பந்தகாரர்சிக்கனஞ்சுண்டப்பா

வரலாறு

தொகு

சர் மிர்சா இஸ்மாயிலால் வடிவமைக்கப்பட்ட இக்கட்டடமானது யுவராஜா காந்தீரவ நரசிம்மராச உடையாரால் திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டடத்திற்கான அடிக்கலை 6 மார்ச் 1933 அன்றுை மகாராஜா கிருட்டிணராச உடையார் நாட்டினார். கட்டிடப் பணிகள் 11 செப்டம்பர் 1935 இல் நிறைவடைந்தது.

இரண்டு பக்கங்களிலும் ஒரே மாதிரியாக தசுக்கன் ஒழுங்கு தூண்களால் தங்கப்பட்டிருக்கும் நுழைவாயிலில், மண்டபத்திற்கு செல்லும் படிகளினுடன் இந்த அமைப்பு கொண்டுள்ளது.

முறையற்ற கேட்பொலியியல் சிக்கல் காரணமாக, 1976 ஆம் ஆண்டில் ரூ .1, 000, 000 மதிப்பிலான சீரமைப்பு பணிகளுக்கு முன்மொழியப்பட்டது. அந்தப் புனரமைப்பு பணிகள் தாமதமானதால் 1990 மார்ச் வரை, கட்டடம் மூடப்பட்டிருந்தது. அப்போது ரூ. 6.5 மில்லியன் (தோராயமாக 371,400 அமெரிக்க டாலர்) செலவு செய்யபட்டது.

இக்கட்டடமானது இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது. மொத்தக் கொள்ளளவு 1,038 இருக்கைகளாகும். புதுப்பிதலைத் தொடர்ந்து இருக்கை எண்ணிக்கை 810 ஆக குறைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bangalore Town Hall
என்பதில் ஊடகங்கள் உள்ளன.



"https://ta.wikipedia.org/w/index.php?title=பெங்களூர்_நகர_மண்டபம்&oldid=4112417" இலிருந்து மீள்விக்கப்பட்டது