பெங்களூர் ராஜதானி விரைவு வண்டி

இந்தியாவில் பெங்களூருவையும் புதுதில்லியையும் இணைக்கும் விரைவுத் தொடர்வண்டி

பெங்களூர் ராஜதானி விரைவுவண்டி (Bangalore Rajdhani Express),பெங்களூரையும் தில்லியையும் இணைக்கும் இந்தியத் தொடருந்து சேவை ஆகும். யஷ்வந்த்பூர் - தில்லி சராய் ரோஹில்லா குளிரூட்டப்பட்ட துராந்தோ விரைவுவண்டிக்கு அடுத்து, பெங்களூருக்கும் தில்லிக்குமான அதிவேக ரயிலாக உள்ளது.

சேவைகள் தொகு

பெங்களூரு – தில்லி இடையே இயக்கப்படும் தொடருந்துக்களில் இரண்டாவது அதிவேக தொடருந்து சேவை இதுவாகும். வேகத்தில் முதலாவதாக துராந்தோ தொடருந்து சேவை உள்ளது. இது தினசரி செயல்படுத்தப்படும் ஒரு தொடருந்து சேவையாகும். இது 22691 என்ற வண்டி எண்ணுடன் பெங்களூர் நகர சந்திப்பிலிருந்து ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம் வரை பயணிக்கிறது. மீண்டும் 22692 என்ற எண்ணுடன் தில்லியிலிருந்து பெங்களூர் வரை பயணிக்கிறது. இது வாரத்தின் நான்கு நாட்கள் இயக்கப்படுகிறது. இவை தவிர மற்ற நாட்களில் 22693/22694 என்ற எண்ணுடன் செயல்படுகிறது. பெங்களூர் நகர சந்திப்பிலிருந்து, ஹஸ்ரத் நிசாமுதீன் ரயில் நிலையத்திற்கு செல்லும்போது சுமார் 2365 கிலோ மீட்டர் தூரத்தினை, 36 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்களில் கடக்கிறது.[1] 22691 என்ற வண்டி எண்ணுடன் செயல்படும்போது சராசரியாக மணிக்கு 72 கிலோ மீட்டர் வேகத்துடன் செயல்படுகிறது. திரும்பி வரும்போது 22692 என்ற வண்டி எண்ணுடன், 2382 கிலோ மீட்டர் தூரத்தினை, 36 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் கடக்கிறது.[2] இதன் சராசரி வேகம் மணிக்கு 72 கிலோ மீட்டர் ஆகும். இதுவே பெங்களூர் – தில்லி ரயில் சேவையில் இரண்டாவது அதிவேக ரயிலாக இடம்பெற முக்கியக் காரணமாகும்.

செகந்திராபாத் வரை லாலகுடா WAP 7 மின்சார இஞ்சினுடன் செயல்படும் பெங்களூர் ராஜதானி விரைவுவண்டி, அதன்பின்பு செகந்திராபாத்திலிருந்து கிருஷ்ணாபுரம் WDP4/WDP4B டீசல் எஞ்சினின் மூலம் பெங்களூர் வரை செயல்படுகிறது. லாலகுடா WAP 7இன் மூலம் அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில்கூட செல்ல முடியும்.

22691 மற்றும் 22692 என்ற வண்டி எண்ணுடன் செயல்படும் தொடருந்து சேவையில் ஸ்ரீசத்யசாய் பிராசாந்தி நிலையம், தர்மவரம் சந்திப்பு, அன்ந்தபூர், ராயச்சூர், சேடம், செகந்திராபாத் சந்திப்பு, காசிபேட் சந்திப்பு, நாக்பூர் சந்திப்பு, போபால் சந்திப்பு மற்றும் ஜான்சி சந்திப்பு போன்ற இடங்கள் உட்பட மொத்தம் 11 நிறுத்தங்கள் உள்ளன. 22693 மற்றும் 22694 என்ற வண்டி எண்ணுடன் செயல்படும் ரயில் சேவையில் ஸ்ரீசத்யசாய் பிராசாந்தி நிலையம், தர்மவரம் சந்திப்பு, செகந்திராபாத் சந்திப்பு, காசிபேட் சந்திப்பு, நாக்பூர் சந்திப்பு, போபால் சந்திப்பு மற்றும் ஜான்சி சந்திப்பு ஆகிய ஏழு நிறுத்தங்கள் உள்ளன.[3] 22693 மற்றும் 22694 என்ற வண்டி எண்ணுடன் செயல்படும் ரயில் சேவையானது, பெங்களூர் – செகந்திராபாத் இடையில் வேறுபட்ட வழியில் செயல்படுகிறது.

வழிப்பாதையும் நிறுத்தங்களுக்கான நேரமும் தொகு

எண் நிலையத்தின்

பெயர் (குறியீடு)

வரும்

நேரம்

புறப்படும்

நேரம்

நிற்கும்

நேரம் (நிமிடங்கள்)

கடந்த

தொலைவு (கி.மீ)

நாள் பாதை
1 எச்

நிசாமுதீன் (NZM)

தொடக்கம் 20:45 0 0 1 1
2 ஜான்சி

சந்திப்பு (JHS)

01:15 01:20 5 403 2 1
3 போபால்

சந்திப்பு (BPL)

04:30 04:40 10 694 2 1
4 நாக்பூர்

(NGP)

10:15 10:25 10 1083 2 1
5 காசிபேட்

சந்திப்பு (KZJ)

16:05 16:07 2 1528 2 1
6 செகந்திராபாத்

சந்திப்பு (SC)

18:35 18:50 15 1660 2 1
7 சேரம்

(SEM)

20:58 21:00 2 1806 2 1
8 ராய்சூர்

(RC)

23:08 23:10 2 1951 2 1
9 அனந்தபூர்

(ATP)

02:18 02:20 2 2140 3 1
10 தர்மவரம்

சந்திப்பு (DMM)

03:25 03:30 5 2173 3 1
11 ஸ்ரீ

சத்ய சாய் பிராசாந்தி நிலையம் (SSPN)

04:03 04:05 2 2206 3 1
12 பெங்களூர்

நகர சந்திப்பு (SBC)

06:40 முடிவு 0 2365 3 1

வரலாறு தொகு

பெங்களூர் ராஜதானி விரைவுவண்டி 1992 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் வாரம் ஒருமுறை மட்டுமே இயக்கப்பட்டு வந்த இந்தத் தொடருந்து பின்பு வாரம் இருமுறை, வாரத்திற்கு மூன்றுமுறை என மாறி அதன்பின் வாரத்திற்கு நான்குமுறை என்றானது. 2010 ஆம் ஆண்டின் மார்ச் மாத இறுதியில் 12493 மற்றும் 12494 என்ற வண்டி எண்களுடன் செயல்பட்ட தொடருந்தானது, 22693 மற்றும் 22694 என்ற வண்டி எண்களுக்கு மாற்றப்பட்டது. 22693 மற்றும் 22694 ஆக வண்டி எண் மாற்றப்பட்டதிலிருந்து தினசரி ரயில் சேவையாக செயல்படத் தொடங்கியது.

குறிப்புகள் தொகு

  1. "Bengaluru Rajdhani Express/21429 Train Bengaluru City/SBC to Delhi Hazrat Nizamuddin/NZM - India Rail Info - Database of Indian Railways Trains & Stations". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 2010-07-26.
  2. "Bangalore Rajdhani/12430 Train Delhi Hazrat Nizamuddin/NZM to Bangalore City/SBC - India Rail Info - Database of Indian Railways Trains & Stations". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 2010-07-26.
  3. "Bangalore Rajdhani Express". cleartrip.com. Archived from the original on 2015-06-14.