பெசாகி கோயில், பாலி

பெசாகி கோயில் (Besakih Temple), இந்தோனேசியாவின் கிழக்கு பாலியில் உள்ள அகுங் மலையின் சரிவுகளில் உள்ள பெசாகி கிராமத்தில் உள்ள ஒரு புரா வளாகத்தில் அமைந்துள்ளது. புரா என்பது கோயிலையே குறிக்கிறது. இது பாலியில் உள்ள இந்து மதத்தின் மிக முக்கியமான, மிகப்பெரிய மற்றும் புனிதமான கோயில் ஆகும்.[1] மற்றும் பாலினிய கோயில்களின் வரிசையில் ஒன்றாகும் . குனுங் அகுங்கின் பக்கவாட்டில் கிட்டத்தட்ட 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயில் 23 தனித்தனியான ஆனால் ஒன்றோடொன்று தொடர்புடைய கோயில்களின் விரிவான வளாகமாக அமைந்துள்ளது. இது மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமானது புரா பெனடரன் அகுங் ஆகும். இந்த கோயில் ஆறு நிலைகளில் கட்டப்பட்டுள்ளது, சாய்வாக அமைந்துள்ளது. நுழைவாயிலில் ஒரு பிளவு நுழைவாயிலைக் கொண்டு அமைந்துள்ளது. அதற்கு அடுத்த நிலையில் கோரி அகுங் எனப்டுகின்ற இரண்டாவது முற்றத்திற்கான நுழைவாயில் உள்ளது.[2]

பெசாகி கோயில்
பாலினிய இந்து புனிதக்கோயில்களில் மிகவும் புனிதமான பெசாகி கோயில்
Map
பொதுவான தகவல்கள்
வகைபுரா வகையில் அமைந்த பாலினிய கோயில்
கட்டிடக்கலை பாணிபாலி
இடம்பெசாகி, கரங்கசேம் ரீஜன்சி, பாலி, இந்தோனேசியா
முகவரிபெசாகி, ரெண்டாங், கரங்கசேம் ரீஜன்சி, பாலி 80863
ஆள்கூற்று8°22′28″S 115°27′03″E / 8.374368°S 115.450936°E / -8.374368; 115.450936
மதிப்பிடப்பட்ட நிறைவு15ஆம் நூற்றாண்டு
வலைதளம்
www.besakihbali.com

வரலாறு

தொகு

கோயில் எப்போதிருந்து இருந்து வருகிறது என்பதான குறித்த துல்லியமான விவரம் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் ஒரு புனித தலமாக அதன் முக்கியத்துவம் கிட்டத்தட்ட வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்தே தொடங்குகிறது. பூரா பெனடரன் அகுங் மற்றும் பல கோயில்களின் கல்லால் ஆன தளங்கள் மெகாலிதிக் ஸ்டெப் பிரமிடுகளை ஒத்த நிலையில் அமைந்துள்ளன. அவை குறைந்தது 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

1284 ஆம் ஆண்டு முதல், முதல் ஜாவானிய வெற்றியாளர்கள் பாலியில் குடியேறிய காலம் தொடங்கி இக் கோயில் இது உறுதிமாக இந்து வழிபாட்டுத் தலமாக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 15 ஆம் நூற்றாண்டில், பெசாகி ஒரு சக்திவாய்ந்த, கெல்கல் வம்சத்தின் மாநிலக் கோயில் என்ற நிலையைப் பெற்றது.[2]

அமைவிடம்

தொகு

இந்த கோயில் பாலியின் முதன்மையான எரிமலையான அகுங் மலையின் தெற்கு சரிவுகளில் அமைந்துள்ளது.

கட்டிடக்கலை

தொகு
 
புரா பெசாகியின் மேரு கோபுரங்கள்

புரா பெசாகி என்பது இருபத்தி மூன்று கோயில்களால் ஆன ஒரு வளாகமாகும். அவை இணையான முகடுகளில் அமைந்துள்ளன. இது பல மாடி மற்றும் செங்கல் நுழைவாயில்களுக்கு ஏறும் மாடி மற்றும் மாடிப்படிகளின் படிகளைக் கொண்டு காணப்படுகிறது. இது பூரா பெனடரன் அகுங் என்று அழைக்கப்படும் பிரதான ஸ்பைர் அல்லது மேரு அமைப்புக்கு வழிவகுக்கிறது. இவை அனைத்தும் ஒரே வடிவிலான அச்சில் சீரமைக்கப்பட்டு, ஆன்மீக எண்ணம் கொண்டு செல்வோரை மேல்நோக்கி மற்றும் புனிதமாகக் கருதப்படும் மலைக்கு நெருக்கமாக வழிநடத்திச் செல்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.[3]

இந்தக் கோயில் வளாகத்தின் முக்கியமான இடமாகக் கருதப்படுவது புரா பெனடரன் அகுங் ஆகும். பிரதான இடத்தின் குறியீட்டு மையம் தாமரை சிம்மாசனம் அல்லது பத்மாசனம் எனப்படும். அந்த இடம்தான் முழு வளாகத்தின் சடங்கின் மையமாகக் கருதப்படுகிறது. இது பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும்.[4]

1963 ஆம் ஆண்டில் அகுங் மலையின் தொடர்ச்சியான வெடிப்புகள். இதனால் சுமார் 1,700 பேர் கொல்லப்பட்டனர்.[5] பூரா பெசாகிக்கும் அதனால் பாதிப்பு ஏற்பட்டது. எரிமலையின் தாக்கம் கோயில் வளாகத்தை விட்டு சில மீட்டர் தொலைவில் சென்றுவிட்டது. ஆதலால் கோயிலுக்கு அதிக பாதிப்பு எதுவும் இல்லை. கோயில் இவ்வாறாகக் காப்பாற்றப் பட்டதை பாலினிய மக்கள் ஒரு பெரிய அதிசயமாகவே நினைக்கின்றனர். மேலும் அவர்கள் கடவுளர்கள் தங்கள் சக்தியை நிரூபிக்க விரும்பிய ஒரு அடையாளமாக, அழிப்பதற்கு அல்ல, என்று பாலினியர்கள் நம்புகின்றனர். அந்த அளவிற்கு அவர்கள் அந்த சின்னத்தின்மிது நம்பிக்கை வைத்துள்ளனர்.

திருவிழாக்கள்

தொகு

ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது எழுபது திருவிழாக்கள் ஒவ்வொரு கோயில் வளாகத்திலும் நடத்தப்படுகின்றன. இந்த விழாச் சுழற்சியனது 210 நாள் பாலினிய பாவுகான் காலண்டர் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட நிலையில் அமைந்துள்ளது.[4]

இக் கோயில் 1995 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உலக பாரம்பரிய தளமாக பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் அது இன்னும் அத் தகுதியைப் பெறவில்லை.[6]

பார்வையாளர்கள்

தொகு

2013 ஆம் ஆண்டில், வெளிநாட்டு பார்வையாளர்கள் 84,368 நபர்கள் (அனைத்து பார்வையாளர்களில் 77.2 சதவிகிதம்), உள்நாட்டு பார்வையாளர்கள் 24,853 நபர்கள் (22.8 சதவிகிதம்) இக் கோயிலுக்கு வந்து சென்றுள்ளனர்.[7]

சர்ச்சை

தொகு

சுற்றியுள்ள சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்கள் கோயிலுக்கு வருவோரிடம் சட்டவிரோதமாக நன்கொடைகளைப் பெறுகின்றனர்.[8]

படத்தொகுப்பு

தொகு

மேலும் காண்க

தொகு
  • இந்தோனேசிய கட்டிடக்கலை
  • பாலினீஸ் இந்து மதம்

குறிப்புகள்

தொகு
  1. "Mount Agung and Pura Besakih". Sacred Destinations. பார்க்கப்பட்ட நாள் 20 July 2010.
  2. 2.0 2.1 Lonely Planet: Bali and Lombok, April 2009, p 215
  3. {{cite book}}: Empty citation (help)
  4. 4.0 4.1 Davison, Julian (2003). Introduction to Balinese architecture. Tuttle Publishing. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7946-0071-9.
  5. "Geology of Mt.Agung". Pusat Vulkanologi & Mitigasi Bencana Geologi — VSI. Archived from the original on 29 September 2008. பார்க்கப்பட்ட நாள் 26 April 2009.
  6. "Besakih — UNESCO World Heritage Centre". Tentative Lists. United Nations Educational, Scientific and Cultural Organization. 19 October 1995. பார்க்கப்பட்ட நாள் 27 April 2009.
  7. "Karangasem Perlu Ciptakan Objek Wisata Baru". June 15, 2014. Archived from the original on 29 August 2014. பார்க்கப்பட்ட நாள் 15 June 2014.
  8. "Ada Pungutan Liar di Besakih, Pariwisata Bali Tercoreng". CNN Indonesia. http://www.cnnindonesia.com/gaya-hidup/20160310114652-269-116495/ada-pungutan-liar-di-besakih-pariwisata-bali-tercoreng/. 

மேலும் படிக்க

தொகு
  • நான் நியோமன் தர்மா புத்ரா மற்றும் மைக்கேல் ஹிட்ச்காக் (2005) பூரா பெசாகிஹ்: இந்தோனேசியா மற்றும் மலாய் உலகில் போட்டியிட்ட ஒரு உலக பாரம்பரிய தளம், தொகுதி 33, வெளியீடு 96 ஜூலை 2005, பக்கங்கள் 225 - 238
  • ஸ்டூவர்ட்-பாக்ஸ், டேவிட் ஜே. (2002) பூரா பெசாகிஹ்: பாலி கேஐடிஎல்வியில் கோயில், மதம் மற்றும் சமூகம், மிச்சிகன் பல்கலைக்கழகத்திலிருந்து அசல் (5 செப்டம்பர் 2008 இல் கூகிள் புத்தகங்களில் டிஜிட்டல் செய்யப்பட்டது) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-6718-146-3 , பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-6718-146-4 . 470 பக்கங்கள்

வெளி இணைப்புகள்

தொகு
  •   விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Besakih
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெசாகி_கோயில்,_பாலி&oldid=3765922" இலிருந்து மீள்விக்கப்பட்டது