பாலி மக்கள்

பாலி மக்கள் (பாலி மொழி: ᬳᬦᬓ᭄‌ᬩᬮᬶ/ᬯᭀᬂᬩᬮᬶ/ᬓ᭄ᬭᬫᬩᬮᬶ, Ânak Bali/Wång Bali/Kramâ Bali; இந்தோனேசியம்: Suku Bali, சுக்கு பாலி) எனப்படுவோர் இந்தோனேசியத் தீவான பாலியின் உள்ளூர் இனக் குழுவாகும். 4.2 மில்லியன் பாலி மக்களின் (இந்தோனேசியாவின் 1.7% மக்கள்தொகை) பெரும்பாலானோர் பாலித் தீவில் வாழ்கின்றனர். இது தீவின் மக்கள்தொகையின் 89% ஆகும்.[1].

பாலி மக்கள்
ᬳᬦᬓ᭄‌ᬩᬮᬶ (Ânak Bali)
ᬯᭀᬂᬩᬮᬶ (Wång Bali)
ᬓ᭄ᬭᬫᬩᬮᬶ (Kramâ Bali)
பாலி நடன மங்கை
மொத்த மக்கள்தொகை
(4.2 மில்லியன் (2012 கணக்கெடுப்பு))
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
இந்தோனேசியா:
பாலி (3,336,065)
மேற்கு நூசா தெங்காரா (119,407)
மத்திய சுலாவெசி (115,812)
லாம்புங் (104,810)
தென்கிழக்கு சுலாவெசி (49,411)
தெற்கு சுமாத்திரா மாகாணம் (38,552)
தெற்கு சுலாவெசி (27,330)
ஆத்திரேலியா (5,529)
மொழி(கள்)
பாலி மொழி, செசாக்கு மொழி, இந்தோனேசிய மொழி
சமயங்கள்
பாலி இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
சாவகர், செசாக்கு, தெங்கர்

வரலாறு

தொகு
 
பாலி நடன மாந்தர், 1920-1940களில்.

வரலாற்றின் மூன்று காலகட்டங்களில் பாலி மக்களின் குடியேற்றம் நடந்துள்ளது. முதலாவது குடியேற்றம் வரலாற்றுக்கு முந்தைய புரோட்டோ மலாய் காலத்தில் சாவகம், மற்றும் கலிமந்தான் ஆகிய இடங்களில் இருந்து இடம்பெற்றது.[2] பின்னர் இந்துக்களின் ஆட்சிக் காலத்தில் சாவகத்தில் இருந்து இங்கு வந்து குடியேறினர். கிபி 15ஆம், 16ஆம் நூற்றாண்டுகளில் சாவகத்தில் இசுலாம் பரவியதைத் தொடர்ந்து மயாபாகித்து பேரரசு வீழ்ச்சி அடையத் தொடங்கியதை அடுத்து சாவகத்தின் மேற்குடி மக்களும், உழவர்களும் இசுலாமுக்கு மதம் மாறுவதில் இருந்து தப்புவதற்காக பாலியில் குடியேறினர்.[3]

2005 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட டி. என். ஏ. ஆய்வு ஒன்றின் படி, 12% பாலி மக்கள் இந்தியர்களுடன் ஒத்திருந்தது. அதே வேளையில், 84% ஆஸ்திரோனேசியர்களுடனும், 2% மெலனீசியர்களுடனும் ஒத்திருந்தது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Bali faces population boom, now home to 4.2 million residents
  2. Shiv Shanker Tiwary & P.S. Choudhary (2009). Encyclopaedia Of Southeast Asia And Its Tribes (Set Of 3 Vols.). Anmol Publications Pvt. Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8-1261-3837-8.
  3. Andy Barski, Albert Beaucort and Bruce Carpenter (2007). Bali and Lombok. Dorling Kindersley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7566-2878-9.
  4. Karafet, Tatiana M.; Lansing, J S.; Redd, Alan J.; and Reznikova, Svetlana (2005) "Balinese Y-Chromosome Perspective on the Peopling of Indonesia: Genetic Contributions from Pre-Neolithic Hunter- Gatherers, Austronesian Farmers, and Indian Traders," Human Biology: Vol. 77: Iss. 1, Article 8. Available at: http://digitalcommons.wayne.edu/humbiol/vol77/iss1/8
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலி_மக்கள்&oldid=3959955" இலிருந்து மீள்விக்கப்பட்டது