பெஞ்சமின் கிளெதுரா
பெஞ்சமின் கிளெதுரா (Benjámin Gledura) அங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீரராவார். 1999 ஆம் ஆண்டு சூலை மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2016 ஆம் ஆண்டு இவருக்கு சதுரங்க கிராண்டுமாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பெஞ்சமின் கிளெதுரா Benjámin Gledura | |
---|---|
பெஞ்சமின் கிளெதுரா 2016 ஆம் ஆண்டில் | |
நாடு | அங்கேரி |
பிறப்பு | 4 சூலை 1999 ஈகெர், அங்கேரி |
பட்டம் | கிராண்டுமாசுட்டர் (2016) |
பிடே தரவுகோள் | 2652 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2654 (சூன் 2019) |
தரவரிசை | இல. 95 (திசம்பர் 2021) |
உச்சத் தரவரிசை | No. 88 (மார்ச்சு 2022) |
சதுரங்க வாழ்க்கை
தொகு1999 ஆம் ஆண்டில் பிறந்த கிளெதுரா 2014 ஆம் ஆண்டில் பன்னாட்டு மாசுட்டர் பட்டத்தையும் [1] [2] 2016 ஆம் ஆண்டில் கிராண்டுமாசுட்டர் பட்டத்தையும் பெற்றார். 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அங்கேரியின் சதுரங்க வீரர் தரவரிசையில் 6 ஆவது இடத்தில் இருந்தார். [3]
ஜனவரி 2019 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் கிளெதுரா டாடா எஃகு நிறுவனத்தின் சதுரங்கப் போட்டியில் போட்டியிட்டு, 8½/13 (+5–1=7) புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். [4] மார்ச் மாதம்,இவர் ஐரோப்பிய தனிநபர் சதுரங்கப் போட்டியில் பங்கேற்றார். அப்போட்டியில் இவர் 7½/11 (+5–1=5) புள்ளிகளுடன் 19 ஆவது இடத்தைப் பிடித்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றார். [5]
2023 ஆம் ஆண்டு அசர்பைசான் நாட்டின் பக்கூ நகரத்தில் நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டியிலும் இவர் கலந்து கொண்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 3rd quarter Presidential Board Meeting August 2014 FIDE
- ↑ 87th FIDE Congress 2016, Baku, Azerbaijan FIDE
- ↑ Staff writer(s) (February 2019). "Federations Ranking - Hungary". FIDE. Archived from the original on 2018-02-10. பார்க்கப்பட்ட நாள் 2018-02-09.
- ↑ McGourty, Colin (28 January 2019). "Tata Steel 2019, 13: Carlsen's Magnificent Seven". Chess24.
- ↑ European Individual Chess Championship 2019: Gledura Benjamin chess-results
புற இணைப்புகள்
தொகு- Benjamin Gledura player profile and games at Chessgames.com
- Benjamin Gledura rating card at FIDE