பெட்டாலிங் தெரு

கோலாலம்பூரில் உள்ள ஒரு கடைத்தெரு
(பெடலிங் தெரு, கோலாலம்பூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


பெட்டாலிங் தெரு (மலாய்: Jalan Petaling; ஆங்கிலம்: Petaling Street; சீனம்: 茨厂街) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் அமைந்துள்ள ஒரு சீனர்ப் பகுதியாகும். சீனப் பண்பாட்டுக் கூறுகளைச் சிறப்பாகக் கொண்ட ஒரு கடைத்தெரு.

பெட்டாலிங் தெரு

இந்தக் கடைத்தெருப் பகுதியை சைனா டவுன் (ஆங்கிலம்: Chinatown KL) என அழைப்பதும் உண்டு. இங்கே துணிமணிகள், அணிகலன் பொருட்கள், பாடல் குறுவட்டுக்கள், திரைப்படக் குறுவட்டுக்கள், இறுவட்டுக்கள் அதிகமாய் விற்பனை ஆகின்றன.

உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் இங்கு கூடுவது வழக்கம். விற்கப்படும் பொருட்களின் விலையைப் பேரம் பேசி குறைப்பது வாடிக்கை. இங்கு போலிப் பொருட்கள் விற்கப் படுவதும்; காப்புரிமை மீறபட்ட பொருட்கள் விற்பதும் பொதுவான கூறுகளாக உள்ளன.

பொது

தொகு

இந்தப் பகுதியில் பல உணவகங்களும் தெருவோர உணவுக் கடைகளும் உள்ளன. ஒக்கியான் மீ (Hokkien mee), ஈக்கான் பகார் (Ikan Bakar) எனும் தீயிலிட்ட மீன், அசாம் லக்சா (asam laksa), கறி இழையுணவு (curry noodles) போன்ற உள்ளூர்ச் சிறப்பு உணவுகளுக்கும் இந்த இடம் புகழ்பெற்றது.

இங்குள்ள வணிகர்கள் பெரும்பாலும் ஆன் சீனர்களாக இருப்பினும், இந்திய, மலாய் மற்றும் வங்காள தேசத்தினரும் வணிகம் செய்கின்றனர்.[1]

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Hunter, Murray (28 July 2015). "Why Kuala Lumpur could be on its way to becoming the sex capital of Asia". Asian Correspondent. Archived from the original on 1 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்டாலிங்_தெரு&oldid=4111245" இலிருந்து மீள்விக்கப்பட்டது