பெடு ஏரி

மலேசியா, கெடா மாநிலத்தில் உள்ள ஓர் ஏரி

பெடு ஏரி (மலாய்: Tasik Pedu; ஆங்கிலம்: Pedu Lake; சீனம்: 柏鲁湖); என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், பாடாங் தெராப் மாவட்டத்தில் (Padang Terap District) அமைந்துள்ள ஓர் ஏரியாகும். தாய்லாந்து நாட்டின் எல்லையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

பெடு ஏரி
பெடு ஏரிப் பகுதியில் காணப்படும் யானைகள்
பெடு ஏரி is located in மலேசியா
பெடு ஏரி
பெடு ஏரி
அமைவிடம்பாடாங் தெராப், கெடா, மலேசியா
ஆள்கூறுகள்6°14′50″N 100°48′47″E / 6.247109°N 100.81295°E / 6.247109; 100.81295
வகைசெயற்கை ஏரி
பூர்வீக பெயர்Pedu Lake Error {{native name checker}}: parameter value is malformed (help)
வடிநில நாடுகள்மலேசியா
மேற்பரப்பளவு75 km2 (29 sq mi)

பெடு ஏரி, முன்பு பெடு நீர்த்தேக்கம் (Kolam Air Pedu) என்று அழைக்கப்பட்டது. பெடு நீர்த்தேக்கம் என்பது பெடு ஆற்றுக்கான (Sungai Pedu) ஒரு வடிகால் நீர்த்தேக்கம் ஆகும்.[1]

அமைவு தொகு

பாடாங் தெராப் மாவட்டத்தில் புக்கிட் பக்கீர் தெர்பாங் (ஆங்கிலம்: Fakir Terbang; மலாய்: Bukit Pakir Terbang) எனும் ஒரு குன்று உள்ளது. இதன் உயரம் 574 மீ. அந்தக் குன்றில்தான் பெடு ஆறு உற்பத்தி ஆகிறது.[2]

அதன் பின்னர் கீழே பாடாங் தெராப் ஆற்றுடன் சங்கமிக்கிறது. பெடு ஆற்றின் மேல் பகுதியில் உள்ள மலைகள் தாய்லாந்திற்கும் மலேசியாவிற்கும் ஓர் எல்லைப் பகுதியை உருவாக்குகின்றன.

இந்த ஏரி 12 கி.மீ. நீளம் கொண்டது. மலேசிய அரசாங்கத்தின் ஒரு பெரிய வளர்ச்சித் திட்டத்தினால், இந்த ஏரி இப்போது முதன்மையான விடுமுறை விடுதியாக மாறி உள்ளது.[2]

பெடு நீர்த்தேக்கம் தொகு

பெடு ஏரி கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் நகரில் இருந்து ஏறக்குறைய 90 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

கெடா மாநிலத்தின் மக்களுக்கு, சுத்தமான தண்ணீரை வழங்குவதற்காக மலேசிய அரசாங்கத்தால் பெடு நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. அதுவே பெடு ஏரி என மாற்றம் கண்டது. பெடு நீர்த்தேக்கம் இப்போது பெடு ஏரி என்று அழைக்கப்படுகிறது.[3]

பெடு ஏரியின் பசுமையான காடுகளில் யானைகள், மான்கள், காட்டுப்பன்றிகள், சிறுத்தைகள், பறவைகள், வௌவால்கள், பறக்கும் நரிகள், பல்வேறு வகையான பூச்சிகள்; வனவிலங்குகள் அதிக அளவில் வசிக்கின்றன.[1]

அல்பினோ பாம்புகள் தொகு

இந்தக் காடுகள் "அல்பினோ பாம்புகள்" எனும் சிறப்பு பாம்பு இனத்தின் சரணாலயமாகவும் உள்ளது.

பேடு ஏரி காடுகளின் செழுமை காரணமாக, பேடு ஏரியின் ஒரு பகுதியையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வனவிலங்கு சரணாலயமாக கெடா அரசாங்கம் அறிவித்து உள்ளது. இதுவ்ர்ர் சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் உருவாக்கி உள்ளது.[4]

இன்றைய நிலை தொகு

இங்கு இருந்த தேசா உத்தாரா பெடு லேக் ரிசார்ட் (Desa Utara Pedu Lake Resort); மற்றும் முத்தியாரா பெடு லேக் கோல்ப் & லேக் ரிசார்ட் (Mutiara Pedu Lake Golf & Lake Resort) எனும் இரு விடுதிகளும் 2007 சனவரி 7-ஆம் தேதி மூடப்பட்டன,

கோடை காலங்களில் ஏரியின் நடுவில் ஒரு பழைய கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் செய்தியினால் சுற்றுலாப் பயணிகள் வருவதும் குறைந்து போனது. இருப்பினும் ஏரிக்கரை விடுதிகளின் அமைப்பு இன்னும் நல்ல நிலையில் உள்ளன. அறைகளை மீண்டும் புனரமைப்பு செய்ய முயற்சிகள் செய்யப் படுகின்றன.

முன்னாள் நான்காவது பிரதமர் துன் மகாதீரின் ஓய்வு இல்லமும் அங்கு உள்ளது. அவரின் இல்லம் பாரம்பரிய வடிவமைப்புக் கலையுடன் ஏரிக்கரையில் இன்றும் உள்ளது. ஆனால், தற்போது அங்குள்ள ஓய்வு இல்லங்கள் அனைத்தும் ஆள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன. தனித்து விடப்பட்ட "மெகா திட்டங்களில்" இதுவும் ஒன்றாகும்.[4]

மேற்கோள்கள் தொகு

மேலும் காண்க தொகு

மலேசிய ஏரிகளின் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெடு_ஏரி&oldid=3427983" இருந்து மீள்விக்கப்பட்டது