பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவப்படுத்துதல் (தடை) சட்டம்

பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவப்படுத்துதல் (தடை) சட்டம், 1986 என்பது இந்திய நாடாளுமன்றத்தின் ஒரு சட்டமாகும், இதன்படி திரைப்படம், வலைத் தொடர்கள், விளம்பரம் அல்லது வெளியீடுகள், எழுத்துக்கள், ஓவியங்கள், புள்ளிவிவரங்கள் அல்லது வேறு எந்த வகையிலும் பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவப்படுத்துவதையும் பெண்களை எதிர்மரையாகக் காட்டுவதைத் தடுக்கவும் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவப்படுத்துதல் (தடை) சட்டம்
இயற்றியதுஇந்திய நாடாளுமன்றம்
இயற்றப்பட்ட தேதி1987 அக்டோபர்

நாடாளுமன்ற உறுப்பினர் திரு மார்கரெட் ஆல்வா மாநிலங்களவையில் இந்த சட்டத்தை முன்வைத்ததன் அடிப்படையில், அக்டோபர் 1987 ஆம் ஆண்டில் இது ஒரு தனிச்சட்டமாக இயற்றப்பட்டுள்ளது.

இதன்படி எந்தவொரு OTT தளங்களும் அல்லது அச்சு ஊடகங்களும் பெண்களை பாலியல் பொருளாகக் சித்தரித்தாலோ அல்லது அதன் நிகழ்ச்சிகளில் பெண்களின் நிர்வாணம் அல்லது ஆபாசத்தைக் காட்டினாலோ, இச்சட்டப்படி அது தண்டனைக்குரிய குற்றமாகும், மேலும் இதன்மூலம் அவ்வாறு வெளிவந்த ஊடகத்தின் தொடரையோ அல்லது அதன் தளத்தையோ தடைசெய்ய முடியும். [1] [2] [3] [4] [5]

மேற்கோள்கள் தொகு

  1. "Indescent Representation of Women". Archived from the original on 3 April 2012. பார்க்கப்பட்ட நாள் 14 June 2012.
  2. Arrest Punjabi singers – Jazzy B, Honey Singh & Diljit Dosanjh: Istri Jagriti Manch (IJM), archived from the original on 7 January 2013, பார்க்கப்பட்ட நாள் 3 January 2013
  3. "The Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021". PRS Legislative Research (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
  4. Sharma, Moksha; Pendyal, Keerti (2021). "Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021 - Protection from Malicious Content or Chilling Free Speech". SSRN Electronic Journal. doi:10.2139/ssrn.3967857. பன்னாட்டுத் தர தொடர் எண்:1556-5068. http://dx.doi.org/10.2139/ssrn.3967857. 
  5. Indecent Representation of Women (Prohibition) Act, 1986. 1986-12-23. http://indiacode.nic.in/handle/123456789/1768.