பெண்கள் ஊடக மையம்
பெண்கள் ஊடக மையம் (Women Media Center) என்பது 2005 ஆம் ஆண்டு பாக்கித்தானில் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களில் பெண்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் இலாப நோக்கற்ற அமைப்பாகும் . பாக்கித்தானின் கராச்சியை தளமாகக் கொண்ட இந்த மையம், பாக்கித்தானிய செய்தி ஊடகங்களில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கிறது.
நிறுவனர் | பௌசியா சாகீன் |
---|---|
வகை | இலாப நோக்கற்ற அமைப்பு |
நோக்கம் | ஊடகவியல் |
தலைமையகம் |
|
சேவைப் பகுதி | இதழியல் துறையில் பெண்கள் |
வலைத்தளம் | www.wmcpk.org |
மையம்
தொகுபெண்கள் ஊடக மையம் 2005 ஆம் ஆண்டில் பௌசியா சாகீனால் நிறுவப்பட்டது. இவர் மையத்தின் நிர்வாக இயக்குநராகவும் பொதுச் செயலாளராகவும் தொடர்ந்து பணியாற்றுகிறார். [1] [2] ஆராய்ச்சி நடத்துதல், ஊடகத்தின் பல்வேறு தொழில்களுக்கும் பெண்களுக்கு கல்வி கற்பித்தல் மற்றும் பாக்கித்தானிய பெண் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடையே படைப்பாற்றல் மற்றும் அதிகாரமளிப்பை மேம்படுத்துதல் போன்றவை இம்மையத்தின் நோக்கங்களாகும்.[3]
பெண் ஊடகவியலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக பாக்கித்தானில் மகளிர் ஊடக மையம் பயிலரங்குகளை ஏற்பாடு செய்து கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துகிறது. [4] [5]
பணி
தொகுபின்வரும் பணி அறிக்கை மகளிர் ஊடக மைய இணையதளத்தில் பதிவாகியுள்ளது.[6]
- பெண்கள் ஊடக மையத்தின் நோக்கம் பல பரிமாணங்களைக் கொண்டது;
- தொழில்சார் சூழலை வழங்குதல் மற்றும் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் கல்வி மூலம் முக்கிய ஊடகங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்தல்.
- விழிப்புணர்வை ஏற்படுத்த தொலைக்காட்சி, காணொளி மற்றும் வானொலியில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஊக்குவிப்பதன் மூலம் பெண்களின் நிலையை மேம்படுத்துதல்.
- பாக்கித்தானிய பெண்களின் கண்ணோட்டத்தில் குடிமைப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
- பெண் பத்திரிகையாளர்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொழில்நுட்பப் பகுதியை உள்ளடக்கிய, பயிற்சித் திட்டங்கள் மேம்பாட்டுப் பாடத்திட்டங்கள் மற்றும் புதிய படிப்புகளின் வடிவத்தில், ஆர்வமுள்ள பெண் பத்திரிகையாளர்களுக்கான நடைமுறை தளத்தில் பாக்கித்தாதானிய பல்கலைக்கழகங்கள், செய்தி ஊடகங்கள் தொடர்புத் துறைகளுடன் இணைந்து பணியாற்றுதல்.
- அதிகாரமளிக்கும் பயிற்சி அளிக்கவும், ஊடக சுதந்திரத்தை மேம்படுத்தவும். பெண் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் நுழைவுத் தடைகளை நிவர்த்தி செய்தல்.
- குறிப்பாக பாக்கித்தான் மற்றும் முழு தெற்காசியாவில் விழிப்புணர்வு மற்றும் ஊடகங்களை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ள நிறுவனத்துடன் அதன் சொந்த தரவுத்தளத்தில் இணைதல்.
- பெண் ஊடகவியலாளர்கள் மற்றும் சேவைகள் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய ஊடகத்துறைக்கு ஒரு நுழைவாயிலை வழங்குதல்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Azmat, Zamiza (18 July 2011). "Pakistani Women in Media: Challenges and Opportunities". Women in News, WAN-IFRA. பார்க்கப்பட்ட நாள் 31 January 2013.
- ↑ "Training for Women Journalists". The Nation. 2016-03-02.
- ↑ "Journalists Should Follow Ethics at All Costs: Zubaida". The Nation. 2013-02-27.
- ↑ Swaffield, Bruce C. (2011-07-01). "Changing a Country, One Woman at a Time". The Quill.
- ↑ "A Seminar on women empowerment today". Daily Post. 2010-05-30.
- ↑ "Our Mission".