பெத்ரோ அரோசோ-அகுதோ
எசுப்பானிய சுற்றுச்சூழல் ஆர்வலர்
பெத்ரோ அரோஜோ-அகுதோ (Pedro Arrojo-Agudo) எசுப்பானியா நாட்டைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். இயற்பியலாளரும், பொருளாதார வல்லுநராகவும் சிறந்து விளங்கிய இவர் ஜராகோசா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். நீர் பாதுகாப்பில் அகுதோ செய்த பங்களிப்புகளுக்காக 2003 ஆம் ஆண்டில் இவருக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[1]
பெத்ரோ அரோசோ-அகுதோ Pedro Arrojo-Agudo | |
---|---|
2012 ஆம் ஆண்டில் பெத்ரோ அரோஜோ-அகுதோ | |
தேசியம் | எசுப்பானியா |
பணி | இயற்பியலாளர், பொருளாதார வல்லுநர் |
பணியகம் | ஜராகோசா பல்கலைக்கழகம் |
விருதுகள் | கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2003) |
2020 ஆம் ஆண்டு பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கான மனித உரிமைகள் குறித்து அகுதோ ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்டார்.[2] நீர்ப் பாதுகாப்பிற்காக அகுதோ 2002 ஆம் ஆண்டில் 400000 மக்களை ஒருங்கிணைத்து பார்சிலோனா தெருக்களில் பேரணி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Europe 2003. Pedro Arrojo-Agudo. Spain. Rivers & Dams". Goldman Environmental Prize. Archived from the original on 15 June 2011. பார்க்கப்பட்ட நாள் 4 December 2010.
- ↑ "Mr. Pedro Arrojo-Agudo, Special Rapporteur on the human rights to safe drinking water and sanitation". பார்க்கப்பட்ட நாள் 2 November 2020.