பெனி மாவட்டம்
பெனி மாவட்டம் தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் சிட்ட்காங் கோட்டத்தில் அமைந்துள்ளது. வங்காளதேசத்தில் தென்கிழக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பெனி நகரம் ஆகும். நவகாளி மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு பெனி மாவாட்டம் 15 பிப்ரவரி 1984-இல் புதிகாகத் துவக்கப்பட்டது.[1] இம்மாவட்டம் நாட்டின் மொத்த வருவாயில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது.
மாவட்ட எல்லைகள்
தொகுசிட்டகாங் கோட்டத்தில் 15 பிப்ரவரி 1984-இல் துவக்கப்பட்ட இம்மாவட்டத்தின் வடக்கில் கொமில்லா மாவட்டம் மற்றும் இந்தியாவின் திரிபுரா மாநிலமும், தெற்கில் வங்காள விரிகுடாவும், கிழக்கில் இந்தியாவின் திரிபுரா மாநிலம் மற்றும் தென் கிழக்கில் சிட்டகாங் மாவட்டமும், மேற்கில் நவகாளி மாவட்டமும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம்
தொகுசிட்டகாங் கோட்டத்தில் 15 பிபரவரி 1984-இல் துவக்கப்பட்ட இம்மாவட்டம் 990.36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பெனி, சோனாகாஜி, சாகோல்நயா, பரசுராம், புல்காஜி, மற்றும் தகோன்வியா என ஆறு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டம் ஐந்து நகராட்சி மன்றங்களையும், நாற்பத்தி மூன்று கிராம ஒன்றியக் குழுக்களையும், 497 வருவாய் கிராமங்களையும், 553 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 3900 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0331 ஆகும். இம்மாவட்டம் மூன்று வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [2]
பொருளாதாரம்
தொகுஇம்மாவட்டம் வேளாண் பொருளாதாரத்தையே நம்பியுள்ளது. இம்மாவட்டத்தில் பெனி ஆறு, சிறு பெனி ஆறு, மகுரி ஆறு, தகாத்தியா ஆறு, செலொனை ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் நெல், சணல், கோதுமை, கரும்பு, பலா, தென்னை, பயறு வகைகள் உருளைக்கிழங்கு முதலியன பயிரிடப்படுகிறது.
மக்கள் தொகையியல்
தொகு990.36 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 14,37,371 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 6,94,128 ஆகவும், பெண்கள் 7,43,243 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.46 ஆக உள்ளது. பாலின விகிதம் 93 ஆண்களுக்கு பெண்கள் 100 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1451 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 59.6% ஆக உள்ளது.[3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.
கல்வி
தொகுவங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sultan, Tipu (2012). "Feni District". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- ↑ Feni District, Bangladesh
- ↑ Community Report Feni Zila June 2012[தொடர்பிழந்த இணைப்பு]