பென்சாயின் குறுக்கம்

பென்சாயின் சேர்க்கை அல்லது பென்சாயின் குறுக்கம் (Benzoin condensation) என்பது இரு ஆல்டிகைடுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு வினை ஆகும். இந்த வினையானது பொதுவாக அரோமேட்டிக் ஆல்டிகைடுகள் அல்லது கிளையாக்சால்களில் நடக்கிறது.[1][2] இந்த வினையின் விளைவாக அசைலாயின் உருவாதல் நிகழ்கிறது. இந்தச் செவ்விய எடுத்துக்காட்டில் பென்சால்டிகைடானது பென்சாயினாக மாறுகிறது.[3]

பென்சாயின் குறுக்க வினையானது முதன்முதலாக 1832 ஆம் ஆண்டில் யஸ்டஸ் வான் லீபிக் மற்றும் பிரெடெரிக் ஓலர் ஆகியோர் வாதுமை எண்ணெய் கொண்டு ஆய்வு மேற்கொண்டிருந்த போது கண்டறியப்பட்டது.[4] வினைவேகமாற்றியாக சயனைடு பயன்படுத்தப்பட்ட இவ்வினையின் மாதிரியானது நிக்கோலே சினின் என்பவரால் 1830 களின் பின்பகுதியில் உருவாக்கப்பட்டது.[5][6]

பென்சாயின் சேர்க்கை

மேற்கோள்கள்

தொகு
  1. Menon, Rajeev S.; Biju, Akkattu T.; Nair, Vijay (2016). "Recent advances in N-heterocyclic carbene (NHC)-catalysed benzoin reactions". Beilstein Journal of Organic Chemistry 12: 444–461. doi:10.3762/bjoc.12.47. பப்மெட்:27340440. 
  2. Enders, Dieter; Niemeier, Oliver; Henseler, Alexander (2007). "Organocatalysis by N-Heterocyclic Carbenes". Chemical Reviews 107 (12): 5606–5655. doi:10.1021/cr068372z. பப்மெட்:17956132. 
  3. Roger Adams, C. S. Marvel (1921). "Benzoin". Organic Syntheses 1: 33. doi:10.15227/orgsyn.001.0033. 
  4. F. Wöhler, J. Liebig (1832). "Untersuchungen über das Radikal der Benzoesäure" (in de). Annalen der Pharmacie 3 (3): 249–282. doi:10.1002/jlac.18320030302. 
  5. N. Zinin (1839). "Beiträge zur Kenntniss einiger Verbindungen aus der Benzoylreihe" (in de). Annalen der Pharmacie 31 (3): 329–332. doi:10.1002/jlac.18390310312. https://zenodo.org/record/1426941. பார்த்த நாள்: 2020-09-11. 
  6. N. Zinin (1840). "Ueber einige Zersetzungsprodukte des Bittermandelöls" (in de). Annalen der Pharmacie 34 (2): 186–192. doi:10.1002/jlac.18400340205. https://zenodo.org/record/1426951. பார்த்த நாள்: 2019-06-28. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சாயின்_குறுக்கம்&oldid=3735067" இலிருந்து மீள்விக்கப்பட்டது