பென் புதையல்
ஃபென் புதையல் என்பது பத்து இலட்சம் டாலர் மதிப்புடைய ஒரு புதையல் ஆகும். இது ராக்கி மலைத்தொடர்களில் கலைப் பொருள் வணிகரான ஃபாரஸ்ட் ஃபென்னால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. பலர் இந்தப் புதையலானது யெல்லோஸ்டோனில் உள்ளதாக நம்புகிறார்கள். [1] இவரிடம் ஏன் இந்த புதையல் வேட்டையை உருவாக்கினீர் என்று கேட்டதற்கு, ஃபென் "மக்களுக்கு சில நம்பிக்கைகளைக் கொடுக்க விரும்பினேன்" என்றார். [2]
ஹண்டர் ஃபென்னின் கூற்றுப்படி, புதையல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலர் கூறிவிட்டனர், என்றாலும் அவர்கள் தங்கள் கூற்றுக்கு எந்த சான்றையும் வழங்கவில்லை. 2017 சூலை வரை, ஃபென் "நான் 7 ஆண்டுகளுக்கு முன்பு மறைத்து வைத்த புதையல் இன்னும் உள்ளது" என்று கூறியுள்ளார். 2017 மே மாதத்தில், அவர் "யாரும் என்னிடம் இதுவரை புதையல் குறித்த ஒன்பது குறிப்புகளைச் சரியான வரிசையில் சொல்லவில்லை" என்று குறிப்பிட்டார். இக்கூற்றானது அனைத்து குறிப்புகளும் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டன என்ற ஊகத்திற்கு வழிவகுத்தது. ஆனால் புதையல் பொட்டியானது மறைந்தே உள்ளது. இன்னும் பலர் புதையலைத் தேடிவருகின்றனர். [3] இவரது சுயசரிதை நூலான தி திரில் ஆஃப் தி சேஸ் என்ற நூலில் இந்த புதையல் குறித்த வரைபடம் கொடுக்கப்பட்டது. மேலும் 24 வரிகளில் ஒரு கவிதையும் எழுதினார். இந்தக் கவிதையில் ஒன்பது இடங்களில் புதையல் மறைத்து வைத்திருக்கும் இடம் குறித்த குறிப்புகள் கொடுக்கப்பட்டதாக கூறுகிறார். இவை புதையல் வேட்டைக் காரர்களையும் சாகச விரும்பிகளையும் கவர்ந்துள்ளது.
வரலாறு
தொகுஃபாரஸ்ட் ஃபென் அமெரிக்க வான்படையில் மேஜர் தகுதியில் இருந்த ஒரு விமானி ஆவார். மேலும் வியட்நாம் போரில் இவரது பணியைப் பாராட்டும் விதமாக அமெரிக்க வான்படையின் மூன்றாவது பெரிய அங்கிகாரமான சில்வர் ஸ்டார் வழங்கப்பட்டது. அச்சமயத்தில் இவர் 328 முறை பறந்தார். [4] அமெரிக்க வான் படையில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தன் நண்பரான ரெக்ஸ் அரோஸ்மித் என்பவரிடம் கலைப்பொருள் வணிகத்தைக் கற்றார். இருவரும் இணந்து நியூமெக்சிகோவில், சாண்டா ஃபே நகரில் அரோஸ்மிக் ஃபென் கேலரி என்ற கடையைத் துவங்கினர். தொழிலில் இருந்து அரோஸ்மித் விலகிய நிலையில் ஃபென்னுடன் இவரது மனைவியான பெக்கி தொழிலில் இணைந்தார். [5] [6] கலைப்பொருட்கள் வணிகத்தில் நன்கு பொருளீட்டினார். [7] இறுதியில் கடையானது நிட்ரா மட்டிசிக்கு விற்கப்பட்டது. [8] 1988 ஆம் ஆண்டு, ஃபென் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த நோயினால் இவர் பாதிக்கப்பட்ட காலகட்டத்தில் ஒரு புதையல் பெட்டியில் தங்கக் கட்டிகள், அரிய நாணயங்கள், நகைகள், மரகதக் கற்கள், வைரங்கள், சிலைகள் போன்ற கலைப் பொருட்களை நிரப்பினார். நோய் முற்றி தான் இன்னும் சில நாட்களில் இறந்துவிடுவோம் என்று தோன்றினால் இந்தப் பெட்டியை எடுத்துச் சென்று எங்கேயாவது மறைத்து வைத்துவிட்டு அங்கேயே இறந்துவிடவேண்டும் என்று திட்டமிட்டார். [9] இருப்பினும், ஃபென் புற்று நோயில் இருந்து மீண்டு வந்தார். இதன் பிறகு இவர் தனது 79 அல்லது 80 வயது காலகட்டத்திலேயே மறைத்து வைத்தார்.
இறப்புகள்
தொகுபுதையலைத் தேடிப்போனவர்களில் நான்கு பேர் விபத்துக்களால் இறந்துவிட்டதாக அறியப்படுகிறது. இது போன்ற காரணங்களால் நியூ மெக்சிகோ காவல்துறையானது இந்த புதையல் வேட்டையை முடிவுக்கு கொண்டுவர ஃபென்னிற்கு அழுத்தம் கொடுக்க முயன்றது. [10]
குறிப்புகள்
தொகு- ↑ Burnett, John. "Seeking Adventure And Gold? Crack This Poem And Head Outdoors". https://www.npr.org/2016/03/13/469852983/seeking-adventure-and-gold-crack-this-poem-and-head-outdoors. பார்த்த நாள்: 26 July 2017.
- ↑ "People continue to seek reported hidden treasure in the Rocky Mountains, despite fatal attempts". http://abcnews.go.com/US/people-continue-seek-reported-hidden-treasure-rocky-mountains/story?id=51766060. பார்த்த நாள்: February 10, 2018.
- ↑ Error on call to Template:Cite interview: Parameter subject (or last) must be specified
- ↑ "Valor Awards for Forrest B. Fenn". MilitaryTimes. https://valor.militarytimes.com/recipient.php?recipientid=97268.
- ↑ "'Rex' Arrowsmith's Former Partner Becomes Leading Art Dealer in West". Belleville Telescope. https://www.newspapers.com/clip/3344366/fenn_and_the_gallery/.
- ↑ "Rex Arrowsmith Obituary". http://www.legacy.com/obituaries/santafenewmexican/obituary.aspx?pid=186527205.
- ↑ "Rivals Scorn His Santa Fe Gallery, but Forrest Fenn Baskets the Cash". People Magazine. http://people.com/archive/rivals-scorn-his-santa-fe-gallery-but-forrest-fenn-baskets-the-cash-vol-25-no-23/.
- ↑ "40 Prominent People - Nedra Matteucci". Southwest Art. http://www.southwestart.com/articles-interviews/feature-articles/40-prominent-people-nedra-matteucci.
- ↑ "The Thrill of the Chase". Hemispheres Inflight Magazine இம் மூலத்தில் இருந்து 2013-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130306140821/http://www.hemispheresmagazine.com/2013/01/01/the-thrill-of-the-chase/.
- ↑ "Police implore author who says he hid treasure to end hunt". CTV News. 20 June 2017. https://www.ctvnews.ca/police-implore-author-who-says-he-hid-treasure-to-end-hunt-1.3468395. பார்த்த நாள்: 30 January 2018.