பெம்பேலா டானா விமான அருங்காட்சியகம், பொகோர்

இந்தோனேசிய அருங்காட்சியகம்

பெம்பேலா டானா விமானப்படை அருங்காட்சியகம் (Pembela Tanah Air Museum) (PETA அருங்காட்சியகம்) இந்தோனேஷியாயாவில் பொகோர் என்னும் இடத்தில் உள்ள அருங்காட்சியகம் ஆகும். இது பெட்டா (நாட்டைப் பாதுகாப்போர்) அருங்காட்சியகம் என்று அழைக்கப்படுகிறது. நாட்டிற்காக தம் பங்களிப்பினை நல்கி நாடு உருவாகக் காரணமாக இருந்த முன்னாள் படையினருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது.[1] கூடுதலாக, இந்தோனேசியாவின் சுதந்திரப் போராட்டம் மற்றும் அதன் சுதந்திரத்தை நிறைவேற்றுவதற்கான தயாரிப்பு பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும் இந்த அருங்காட்சியகம் வழங்குகிறது.[2]

அமைவிடம்

தொகு

பொகோர் நகரத்தின் வரலாற்றைப் பற்றி பல சுற்றுலாப் பயணிகள் தெரிந்துகொள்ள நேரத்தை ஒதுக்கி பார்க்க வேண்டிய இடம் பெம்பேலா டானா அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தைத் தேசபக்த அருங்காட்சியகம் என்று அழைக்கின்றார்கள். பெட்டா அருங்காட்சியகம் என்றுகூட இதனை அழைக்கின்றனர். இது மத்திய போகர் நகரத்தைச் சேர்ந்த பபாடன் என்ற கிராமத்தில் உள்ளது. அது அமைந்துள்ள இடத்தின் முகவரி 35, ஜெனரல் கதிர்மன் தெரு என்பதாகும். அங்கு விசாரித்து அவ்விடத்தைச் சென்றடையலாம். இந்த அருங்காட்சியகம் பொகோர் அரண்மனைக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது. இது அங்கிருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ளது. 1745 ஆம் ஆண்டு முதல் முதல் இந்த இடமானது ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடமாகத் திகழ்ந்து வருகிறது. 1943 ஆம் ஆண்டில், பெட்டா இராணுவம் ஜப்பானோடு சண்டை போரிடும்போது இந்தக் கட்டடத்தை தன் தளமாக வைத்திருந்தது. ஜப்பானியர் அப்போது படையெடுப்பாளர் என்ற நிலையிலும் ஆக்ரமிப்பாளர் என்ற நிலையிலும் இருந்தனர். உண்மையில் சொல்லப் போனால் இந்த இராணுவம்தான் தற்போதைய இந்தோனேசிய தேசிய இராணுவம் அமைவதற்கான ஒரு வித்தாக இருந்தது என்று கூறலாம். இந்த கட்டிடம் 1993 ஆம் ஆண்டில் ஒரு அருங்காட்சியகம் மற்றும் சுற்றுலாத் தலமாக திறந்து வைக்கப்பட்டது. மேலும் இது காலனித்துவ காலத்தைச் சேர்ந்த, உள்ளூர் மக்களின் போராட்டம் தொடர்பான ஏராளமான வரலாற்றுச் சேகரிப்புகளை இந்த அருங்காட்சியகம் தன் தொகுப்புகளை சேமித்து வைத்துள்ளது. இங்குள்ள காட்சிப்பொருள்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது ​​அருங்காட்சியகத்திலுள்ள ஜெனரல் சுதிர்மனின் கம்பீரமான சிலை ஆகும். அந்த சிலையானது அருங்காட்சியகத்தின் முன்னே கம்பீரமான நிலையில் உள்ளது.

வரலாறு

தொகு

இதற்கான கட்டடம் 1745 ஆம் ஆண்டில் காலனித்துவ இராணுவ வீரர்களால் ஐரோப்பிய (பிரித்தானிய) பாணியில் கட்டப்பட்டதாகும்.[3] 1943 ஆம் ஆண்டில், இந்த கட்டிடம் இராணுவ பயிற்சி மையமாக பயன்படுத்தப்பட்டது (அப்போது வரை அந்தக் கட்டடம் ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்தது). துணை ஜனாதிபதியான உமர் விராதிகுசுமா என்பவரால் இந்தக் கட்டடத்திற்கான முதல் அடிக்கல் 1993 நவம்பர் 14 ஆம் நாளன்று நடப்பட்டது. அது முதல் இந்த அருங்காட்சியகத்தின் வளர்ச்சி ஆரம்பனமாது.[4] இந்த வளர்ச்சி ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வந்தது. பின்னர் இந்த அருங்காட்சியகம் ஜனாதிபதி சுஹார்ட்டோவால் டிசம்பர் 18, 1995 ஆம் நாளன்று திறந்து வைக்கப்பட்டது.

சிறப்பு

தொகு

இந்த அருங்காட்சியகத்தின் முக்கியமான காட்சிப்பொருள்களாக இங்குள்ள 14 டயோராமக்களைக் கூறலாம். அவை இந்தோனேசியாவின் மீது படையெடுத்த படையெடுப்பாளர்களைப் பற்றிய, அவர்களை எதிர்த்து இந்தோனேசியாவின் சுதந்திரத்தைப் பெற்றவை தொடர்பானதாக உள்ளன.

குறிப்புகள்

தொகு
  1. "Museum Pembela Tanah Air". Indonesia: disparbud.jabarprov.go.id. Archived from the original on 4 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 8 May 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); External link in |publisher= (help)
  2. "Mengunjungi Museum PETA, Tempat Soedirman dan Soeharto Dilatih". merdeka.com. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014. {{cite web}}: External link in |publisher= (help)
  3. "Museum PETA". Indonesia: kotabogor.go.id. Archived from the original on 30 March 2014. பார்க்கப்பட்ட நாள் 8 May 2014. {{cite web}}: External link in |publisher= (help)
  4. "Museum PETA (Perjuangan Bogor)". asosiasimuseumindonesia.org. பார்க்கப்பட்ட நாள் 8 May 2014. {{cite web}}: External link in |publisher= (help)