பெய்ஜிங் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்

பெய்ஜிங் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Beijing Museum of Natural History) என்பது சீன மக்கள் குடியர்சின் தலைநகரமான பெய்ஜிங்கில் அமைந்துள்ள முதல் பெரிய அளவிலான இயற்கை வரலாற்று அருங்காட்சியகமாகும். இது சீனாவில் மிகவும் பிரபலமான இயற்கை வரலாற்று அருங்காட்சியகமாகும் . [1] இது 1951 ஆம் ஆண்டில் தேசிய வரலாற்று வரலாற்று அருங்காட்சியகமாக நிறுவப்பட்டது. அதன் பெயர் 1962 இல் பெய்ஜிங் இயற்கை வரலாற்று அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. [2]

பெய்ஜிங் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
Map
நிறுவப்பட்டது1951
அமைவிடம்தோன்செங், பெய்ஜிங், சீனா
ஆள்கூற்று39°52′54″N 116°23′38″E / 39.88167°N 116.39389°E / 39.88167; 116.39389
வகைஇயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
வலைத்தளம்http://www.bmnh.org.cn

அருங்காட்சியகம் மொத்தம் 24,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. அவற்றில் 8,000 சதுர மீட்டர் பரப்பளவில் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படுள்ளது. 200,000க்கும் மேற்பட்ட மாதிரிகள் உள்ளன. முக்கிய காட்சி பகுதி தியான் ஜியாபிங் கட்டிடத்தின் சேகரிப்பில் தொல்லுயிரியல், பறவையியல், பாலூட்டிகள் , முதுகெலும்பிலிகள் போன்றவை உள்ளன. மேலும் டைனோசரின் புதைபடிவங்களும், அவற்றின் எலும்புக்கூடுகளின் முக்கிய தொகுப்பும் இதில் அடங்கும். அருங்காட்சியகம் இந்த பகுதிகளில் குறிப்பிடத்தக்க அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. [2]

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு