பெரசு டார்ட்டரேட்டு

வார்ப்புரு:Chembox Legal status

பெரசு டார்ட்டரேட்டு (Ferrous tartrate) என்பது C4H4FeO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டார்ட்டாரிக் அமிலத்தின் இரும்பு உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது.[1]

பெரசு டார்ட்டரேட்டு
Ferrous tartrate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(2ஆர்,3ஆர்)-2,3-ஈரைதராக்சிபியூட்டேன்டையோயேட்டு; இரும்பு(2+)
வேறு பெயர்கள்
இரும்பு ஒயின், பெரசு டார்ட்டரேட்டு, வினம் பெரி
இனங்காட்டிகள்
2944-65-2 Y
ChemSpider 4954134
InChI
  • InChI=1S/C4H6O6.Fe/c5-1(3(7)8)2(6)4(9)10;/h1-2,5-6H,(H,7,8)(H,9,10);/q;+2/p-2/t1-,2-;/m1./s1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6451676
  • C(C(C(=O)[O-])O)(C(=O)[O-])O.[Fe+2]
UNII ZRW631PTZD Y
பண்புகள்
C4H4FeO6
வாய்ப்பாட்டு எடை 203.92 கி/மோல்
தோற்றம் சிவப்பு தூள்
மருந்தியல்
ATC code
Pharmacokinetics:
Routes of
administration
வாய்வழி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பயன்

தொகு

இரும்பு டார்ட்ரேட்டு ஓர் எஃகு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.[2][3] மனச்சோர்வு, பீதி நோய் போன்ற பதட்டம் தொடர்பான நிலைமைகளுக்கு எஃகு மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இம்மருந்து பரிந்துரைக்கப்பட்டது.[4] பலவகையான தானியங்களிலிருந்து பெறப்பட்ட செறிவூட்டப்பட்ட ஒயின் [5] எனப்படும் மதுவுடன் டார்ட்டாரிக் அமிலத்தைச் சேர்த்து 30 நாட்களுக்கு வினைபுரியச் செய்து வைத்து பெரசு டார்ட்டரேட்டு தயாரிக்கப்படுகிறது. இதைத் தயாரிப்பதும் கடினமாகும்.[6]

வரலாற்று ரீதியாக, பெரசு டார்ட்டரேட்டடை 2 தேக்கரண்டி அளவுகளில் வயிற்றுக்கு சத்து மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்பட்டது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ferrous tartrate". chemspider.com. பார்க்கப்பட்ட நாள் 20 June 2015.
  2. Pharmacopoeia of the City of London Hospital for Diseases of the Chest, Victoria Park (in லத்தின்). London. 1908. p. 50.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  3. J. A. Forret (1891). "Notes on Iron Wine". The Pharmaceutical Journal and Transactions. J. & A. Churchill. pp. 640–641.
  4. Harry Napier Draper (1864). Manual of the medicinal preparations of Iron, including their preparation, chemistry, physiological action, and therapeutical use. With an appendix, containing the Iron Preparations of the British Pharmacopœia. p. 118.
  5. Ruoff, Henry W. (1901). The Century Book of Facts. King-Richardson Company. p. 405.
  6. The Analytical Review, Or History of Literature, Domestic and Foreign, on an Enlarged Plan. Vol. 2. 1788. p. 195.
  7. Brunton, T. Lauder (1885). "B.P. Vinum Ferri". A Text-Book Of Pharmacology, Therapeutics And Materia Medica (3rd ed.). Macmillan And Co.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரசு_டார்ட்டரேட்டு&oldid=3793252" இலிருந்து மீள்விக்கப்பட்டது