பெரியநீலாவணை

இலங்கையில் உள்ள இடம்

பெரியநீலாவணை கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள ஒரு தமிழ்க் கிராமம் ஆகும். இது வடக்கே பெரியகல்லாறு கிராமத்தையும், கிழக்கே இந்து மகாசமுத்திரத்தையும், தெற்கே மருதமுனை கிராமத்தையும், மேற்கே துறைநீலாவணை கிராாமத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது.

பெரியநீலாவணை
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
பிசெ பிரிவுகல்முனை
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+6 (Summer time)

நான்கு கிராம சேவகர் பிரிவுகள் இங்கே காணப்படுகின்றன. அம்பாறை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இடையிலான எல்லையில் ஏ-4 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு 2284 குடும்பங்களைச் சேர்ந்த 9147 பேர் வசிக்கின்றனர்.[1]

பெயர்க்காரணம்

தொகு

இவ்வூர் பெரியநீலன் என்ற சிற்றரசனின் ஆட்சியின் கீழ் இருந்தபோது, இப்பகுதியில் பெரிய அணைக்கட்டு ஒன்றைக் கட்டியுள்ளான். அது மட்டுமல்லாமல், இந்தியாவில் இருந்து கௌத்தன் என்ற முனிவர் இங்கு வந்து விஷ்ணு ஆலயம் ஒன்றை அமைத்ததாலும் இவ்வூருக்கு பெரியநீலாவணை என்ற பெயர் வந்ததாக இங்குள்ள மூத்தோர் கூறுவர்.[1]

கோவில்கள்

தொகு
  • ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம்
  • ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம்
  • ஆலயடி ஸ்ரீ சித்திவினாயகர் ஆலயம்
  • ஸ்ரீ பெரியதம்மிரான் ஆலயம்
  • ஸ்ரீீநாக கன்னிகை ஆலயம்

இங்கு பிறந்தோர்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியநீலாவணை&oldid=3917049" இலிருந்து மீள்விக்கப்பட்டது