பெரியானைக்குட்டி சுவாமிகள்
பெரியானைக்குட்டி சுவாமிகள் (இ. 1911) ஈழத்தில் ஆன்மீக சாதனைகளில் சிறந்து விளங்கிய சித்தர்களில் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇவர் கண்டியிலே சிறு வயதில் சலவைத் தொழிலாளி ஒருவரின் பராமரிப்பில் இருந்து வந்தவர். பின்னர் கண்டி கதிரேசன் கோயில் படிகளிலே தங்கிச் சித்த சாதனைகளில் ஈடுபாட்டு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு இந்தியா சென்று நவநீத சுவாமிகளின் நட்பினைப் பெற்றார். அங்கு சித்தானைக்குட்டி சுவாமிகளைத் தொண்டராக ஏற்றுக்கொண்டார். இருவருடனும் சேர்ந்து பல சாதனைகளைச் செய்துவிட்டு மூவருமாக இலங்கை வந்தனர்.
இலங்கை மீண்ட சுவாமிகள் பெரும்பாலும் கொழும்பிலேயே தங்கியிருந்தார். கொழும்பு வீதிகளிலே அதிகமாக நடமாடினார். கொழும்பு கப்பித்தாவாத்தை பிள்ளையார் கோயிலில் தங்கியிருந்தார். இவரைப் போற்றியவர்களிலே சேர் பொன்னம்பலம் இராமநாதன் குறிப்பிடத்தக்கவர்.
சீடர்கள்
தொகுஇவரின் சீடர்களில் சித்தானைக்குட்டி சுவாமிகளும் மொட்டைச்சி அம்மையாரும் குறிப்பிடத்தக்கவர்கள். மொட்டைச்சி அம்மையார் திருக்கேதீஸ்வரத்தில் கொட்டில் அமைத்து வாழ்ந்து வந்தார்.
சமாதி
தொகுபெரியானைக்குட்டி சுவாமிகள் 1911 இல் சமாதியடைந்தார். இவருடைய சமாதி கொழும்பு முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. இவரது சமாதியுடன் ஒரு பிள்ளையார் கோயிலும் கட்டப்பட்டுள்ளது.
உசாத்துணை
தொகு- இந்துக்கலைக் களஞ்சியம் (பொ. பூலோகசிங்கம், 1990, கொழும்பு)