பெரிய நிக்கோபார் பாம்புண்ணிக் கழுகு

பெரிய நிக்கோபார் பாம்புண்ணிக் கழுகு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
அக்சிப்பிட்ரிபார்மிசு
குடும்பம்:
அக்சிப்பிட்ரிடே
பேரினம்:
இனம்:
இ. குளோசி
இருசொற் பெயரீடு
இசுபிலோர்னிசு குளோசி
ரிச்மாண்ட், 1902

பெரிய நிக்கோபார் பாம்புண்ணிக் கழுகு (Great Nicobar serpent eagle) என்றும் அழைக்கப்படும் தென் நிக்கோபார் பாம்பு கழுகு (இசுபிலோர்னிசு குளோசி), அக்சிபிட்ரிடே குடும்பத்தில் கொன்றுண்ணிப் பறவை இனமாகும். இது கழுகுகளில் மிகச்சிறிய கழுகு இனமாகும். இதன் உடல் எடை சுமார் 450 கிராம் மற்றும் உடல் நீளம் சுமார் 40 செ.மீ. ஆகும்.[2] இது இந்தியத் தீவான பெரிய நிக்கோபார் தீவில் மட்டும் காணக்கூடிய அகணிய உயிரியாகும். இது வாழ்விடம் இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

தற்பொழுது இது தனிச் சிற்றினமாகக் கருதப்படுகிறது, ஆனால் முன்னர் இது சு. மினிமசின் துணையினமாகக் கருதப்பட்டது. இன்று மினிமசு என்பது கொண்டை பாம்புண்ணிக் கழுகின் துணையினமாகக் கருதப்படுகிறது. மேலும் மத்திய நிக்கோபார் தீவுகளிலிருந்து மோனோடிபிக் இனமாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு