பெரிய பாமிர்

ஆப்கானித்தான் புவியியல்

பெரிய பாமிர் (Great Pamir or Big Pamir)[1][2] ஆப்கானித்தான் நாட்டின் கிழக்கில் உள்ள படாக்சான் மாகாணத்தில் அமைந்த வக்கான் மாவட்டத்தின் கிழக்கில் U வடிவத்தில் அமைந்த புல்வெளி சமவெளியாகும். இதனை பாமிர் சமவெளி என்றும் அழைப்பர். இதன் அருகில் பாமிர் மலைகள் மற்றும் வடக்கில் தஜிகிஸ்தான் நாடும் அமைந்துள்ளது. பெரிய பாமிரின் முடிவில் சோர்கோ ஏரி அமைந்துள்ளது.

பெரிய பாமிர் சமவெளி 60 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. [3] இதன் வடக்கில் தெற்கத்திய அலிச்சூர் மலைத்தொடர்களும் மற்றும் தெற்கில் நிக்கோலஸ் மலைத்தொடரும் மற்றும் வாக்கன் மலைத்தொடரும் அமைந்துள்ளது.

கோடைகாலத்தில் பெரிய பாமிர் புல் சமவெளியை ஆடு, மாடுகள் மேய்ப்பதற்கு ஆப்கானிய வக்கான் மக்களும், கிர்கிஸ் மக்களும் பயன்படுத்துகின்றனர்.[4]

ஆப்கானித்தான் நாட்டின் உயர்ந்த மலைப்பகுதியில் அமைந்த பெரிய பாமிர் சமவெளியில் உற்பத்தி ஆகும் அபாக்கான், மஞ்ஜுலாக், சர்காஸ் மற்றும் துலிபாய் ஆறுகள் பாமிர் ஆற்றில் கலக்கிறது. மேலும் இப்பகுதியில் 57,700 எக்டேர் பரப்பளவு கொண்ட காட்டுயிர் காப்பகம் அமைந்துள்ளது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Felmy, Sabine; Kreutzmann, Hermann (2004). "Wakhan Woluswali in Badakhshan". Erdkunde 58: 97–117. doi:10.3112/erdkunde.2004.02.01. https://zenodo.org/record/1038355/files/article.pdf. 
  2. Lonely Planet (2007):' Afghanistan p.170
  3. Aga Khan Development Network (2010): Wakhan and the Afghan Pamir பரணிடப்பட்டது 2011-01-23 at the வந்தவழி இயந்திரம்
  4. Ostrowski, Stéphane (January 2007), Wakhi Livestock in Big Pamir in 2006 (PDF), United States Agency for International Development, பார்க்கப்பட்ட நாள் 2010-07-23
  5. "Big Pamir". BirdLife Data Zone. BirdLife International. 2021. பார்க்கப்பட்ட நாள் 13 March 2021.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_பாமிர்&oldid=3246779" இலிருந்து மீள்விக்கப்பட்டது