பெருங்கடுங்கோ
பெருங்கடுங்கோ சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். இவன் தந்தை கோ ஆதன் செல்லிரும்பொறை. பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ. இந்த இளங்கடுங்கோ சங்ககால அமணர் (சமணர்) துறவிகளுக்கு கருவூரை அடுத்த ஆறுநாட்டான் மலைக் குகைகளில் படுக்கை அமைத்துக் கொடுத்தான். [1]
இவனைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ எனக் கொள்ள இடமுண்டு.