இளங்கடுங்கோ
சங்ககாலச் சேர மன்னர்
இளங்கடுங்கோ சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். இவன் தந்தை பெருங்கடுங்கோ. பெருங்கடுங்கோவின் தந்தை கோ ஆதன் செல்லிரும்பொறை. இந்த இளங்கடுங்கோ சங்ககால அமணர் (சமணர்) துறவிகளுக்கு கருவூரை அடுத்த ஆறுநாட்டான் மலைக் குகைகளில் படுக்கை அமைத்துக் கொடுத்தான். [1]
இவனை மருதம் பாடிய இளங்கடுங்கோ எனக் கொள்ள இடமுண்டு.