கோ ஆதன் செல்லிரும்பொறை

கோ ஆதன் செல்லிரும்பொறை புகழூர்க்கல்வெட்டில் குறிக்கப்படும் ஒரு நபர். சங்ககால நூல் பதிற்றுப்பத்து சேர மன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் சேர மன்னனைக் குறிப்பிடுகிறது. இவனது மகன் பெருஞ்சேரல் இரும்பொறை என்றும், பேரன் இளஞ்சேரல் இரும்பொறை என்றும் அந்த நூல் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ என்றும், இப் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ என்றும் குறிப்பிடுகிறது. எனவே 'செல்', 'செல்வம்' என்னும் சொல் ஒப்புமையைக் கொண்டு செல்வக் கடுங்கோ வாழியாதனும், கோ ஆதன் செல்லிரும்பொறையும் ஒருவர் எனக் கொள்ள இயலவில்லை.

சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

கல்வெட்டு குறிப்பிடும் குறிப்பிடும் பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ ஆகியோரைப் புலவர்கள் எனக் காண்கிறோம். இவர்கள் அரசர் புலவர்கள். கலித்தொகை நூல் ஏனைய சங்கப்பாடல்களை நோக்கக் காலத்தால் பிற்பட்டது. எனவே பெருங்கடுங்கோ மன்னனைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ எனக் கொண்டால் கல்வெட்டு காட்டும் அரசர்களின் காலம் பதிற்றுப்பத்து காட்டும் அரசர்களின் காலத்திற்குப் பிற்பட்டது எனக் கொள்வது பொருத்தமானது.