பெருநகர பாஸ்டன்

பெருநகர பாஸ்டன் (Greater Boston) நியூ இங்கிலாந்திலுள்ள ஓர் பெருநகர வலயமாகும்; இதில் பாஸ்டன் நகராட்சியும் சுற்றியுள்ள நகர்ப்புறங்களும் அடங்கியுள்ளன. இது ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பெருநகரங்களின் வடக்கு வளைவாக அமைந்துள்ளது. இந்த வலயத்தில் தென் கடலோர வலயமும் காட் முனையும் நீங்கலாக மாசச்சூசெட்சின் கிழக்கில் மூன்றில் ஒரு பங்கு அடங்கியுள்ளது. இது சில நேரங்களில் கூட்டு புள்ளியியல் பகுதியாக வரையறுக்கப்படுகின்றது; அப்போது நியூ ஹாம்சயரிலுள்ள மிகப் பெரிய நகரமான மான்செஸ்டர், பிராவிடென்ஸ் (றோட் தீவு தலைநகரம்), வொர்செஸ்டர் (நியூ இங்கிலாந்தின் பெரிய நகரம்) ஆகியனவும் சேர்க்கப்படுகின்றன. பெருநகர பாஸ்டனின் மாந்த நாகரிகத்திற்கான தாக்கமிக்க பங்களிப்பாக இந்த வலயத்திலுள்ள பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் மூலமான உயர்கல்வி, புத்தாக்கம், அறிவியல் அறிவு வழி, மற்றும் விளையாட்டுப் பண்பாடு உள்ளன.

பாஸ்டன் கூட்டுப் புள்ளியியல் பகுதி
பாஸ்டன்–வொர்செஸ்டர்–பிராவிடென்ஸ்
பெருநகர வலயம்
பாஸ்டன்
Location of பாஸ்டன் கூட்டுப் புள்ளியியல் பகுதி
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலங்கள்
முதன்மை நகரங்கள்
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்4,732,161 (MSA) or 8,099,575 (CSA)
நேர வலயம்கி.நே.வ
தொலைபேசி குறியீடு617, 781, 857, 339, 978, 508, 351, 774, 603, 401

ஐக்கிய அமெரிக்காவின் பெருநகர புள்ளியியல் பகுதிகளில் மக்கள்தொகை அடிப்படையில் பெருநகர பாஸ்டன் பத்தாவது இடத்தில் உள்ளது; இந்த வலயத்தில், 2014 ஐ.அ. மக்கள்தொகை கணக்கெடுப்பு மதிப்பீட்டின்படி 4,732,161 மக்கள் வாழ்கின்றனர். அமெரிக்க கூட்டுப் புள்ளியியல் பகுதிகளில் ஆறாவது இடத்தில் உள்ளது; மக்கள் தொகை 8,099,575.[1] அமெரிக்கப் பண்பாடு மற்றும் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளுக்கும் இடங்களுக்கும் இந்தப் பகுதி உரிமை கொண்டுள்ளது; குறிப்பாக அமெரிக்க இலக்கியம்,[2] அரசியல் மற்றும் அமெரிக்கப் புரட்சியில் பங்கேற்ற பல ஆளுமைகள் இந்த வலயத்தைச் சேர்ந்தவர்கள்.

மிகவும் விரிவான வரையறுப்பில் இந்த வலயத்தில் மேய்னின் கடலோர கவுன்ட்டிகளும் கம்பர்லாந்து, யார்க் நகரங்களும் றோட் தீவு முழுமையான மாநிலமும் அடங்கும். பாஸ்டன் நகராட்சிக்குத் தொடர்ச்சியாக நகரிய, ஊரகப் பகுதிகளைக் கொண்டிராத நியூ இங்கிலாந்து மாநிலங்களாக கனெடிகட்டும் வெர்மான்ட்டும் உள்ளன.

மேற்சான்றுகள் தொகு

  1. "2014 American Community Survey 1-Year Estimates". United States Census Bureau. Archived from the original on பிப்ரவரி 13, 2020. பார்க்கப்பட்ட நாள் January 18, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Will Joyner (9 April 1999). "Where Literary Legends Took Shape Around Boston". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 9 November 2015.

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருநகர_பாஸ்டன்&oldid=3865261" இலிருந்து மீள்விக்கப்பட்டது