பெருந்தட்டை சிவன் கோயில்
பெருந்தட்டை சிவன் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூரில் உள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான இந்து கோவில் ஆகும். திரேதா யுகத்தில் பரசுராமர் சிவபெருமானின் சிலையை நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. கேரளாவில் உள்ள 108 பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1]
வரலாறு
தொகுபல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்தச் சிவன் கோயில் கோழிக்கோடு சாமோரின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்துவந்தது. சுந்தரமூர்த்தி நாயனார், திருக்கோவையில் இக்கோயிலைப் பற்றிக் கூறியுள்ளார். திப்புவின் படையெடுப்பின் போது அழிக்கப்பட்ட பெரிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் இடிப்பதற்கு சற்று முன்பாக, பக்தர்கள் குருவாயூரப்பன் சிலையுடன் அம்பலப்புழாவுக்கு திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது. குருவாயூர் கோயிலின் தென்மேற்குப் பகுதியில் பெருந்தட்ட மகாதேவர் கோயில் உள்ளது. கோவில் வளாகத்தில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. [2] சமீபத்தில், கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது திப்புவைக் காக்க ஜாமோரின் படைகள் முயன்றதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அகழாய்வின்போது 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தஇரண்டு பெரிய பீரங்கிகள் இங்கு கிடைத்தன. [3]
கோயில், கட்டிடக்கலை
தொகுகோயில் மிகவும் அழகாகவும், மகா கோயிலைப் போலவும் உள்ளது. மூலவர் கருவறை உரிய விகிதாச்சாரத்துடன் கம்பீரமாக இரண்டு நிலைகளைக் கொண்டு அமைந்துள்ளது. கேரளக் கோயில் கட்டிடக்கலைப் பாணியைக் கொண்டுள்ள இக்கோயிலின் கருவறை சரணாலயம் செவ்வக வடிவில் உள்ளது. இக்கோயிலுக்கு சுமார் 2 ஏக்கர் நிலம் உள்ளது. அதைச் சுற்றி ஒரு பெரிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் நான்கு புறங்களிலும் கிராமத்தின் அமைதியான சூழலைக் காணமுடியும்.
துணைத்தெய்வங்கள்
தொகுஇக்கோயிலில் கணபதி, விஷ்ணு, சுப்ரமணியன், துர்கா, நாகராஜா, சாஸ்தா உள்ளிட்ட துணைத்தெய்வங்கள் உள்ளன.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ . Sep 2017.
{{cite book}}
: Missing or empty|title=
(help) - ↑ Title Temples and legends of Kerala Volume 252 of Bhavan's book university Author Kunissery Ramakrishnier Vaidyanathan Publisher Bharatiya Vidya Bhavan, 1982 Original from the University of Michigan Digitized 19 Jul 2007 Length 216 pages Subjects Hindu legends Hindu temples Kerala (India)
- ↑ . 2 October 2009.