பெருந்திரளை
பெருந்திரளை அல்லது பாக்குவெட்டி[3] (Humphead wrasse) என்பது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பவளப் பாறைகளில் முதன்மையாக காணப்படும் ஒரு பெரிய மீன் இனம் ஆகும். இதன் வாய் அமைப்பைக் கொண்டு பாக்குவெட்டி என்றும் அழைக்கப்படுகிறது.
பெருந்திரளை | |
---|---|
மெல்போர்ன் மீன்காட்சி சாலையில் ஒரு ஆண் பெருந்திரளை | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Cheilinus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/CheilinusC. undulatus
|
இருசொற் பெயரீடு | |
Cheilinus undulatus Rüppell, 1835 | |
வேறு பெயர்கள் [2] | |
|
விளக்கம்
தொகுபெருந்திரளை மீனினமானது லாப்பிரிடே குடும்பத்தைச் சேர்ந்த பெரிய மீனினமாகும். இதில் பொதுவாக ஆண் மீன்களானது பெண் மீள்களை விட பெரியவையாக 2 மீட்டர் வரை வளரக்கூடியதாக, 180 கிலோ வரை எடைகொண்டதாக இருக்கும். என்றாலும் இவற்றின் சராசரி நீளம் ஒரு மீட்டருக்கும் குறைவாகவே உள்ளது. பெண் மீன்கள் அரிதாக ஒரு மீட்டருக்கு மேல் வளரும். இந்த இன மீனை அதன் பெரிய தடித்த உதடுகள், கண்களுக்குப் பின்னால் உள்ள இரண்டு கருப்பு கோடுகள், வளர்ந்த மீன்களின் நெற்றியில் உள்ள புடைப்பு ஆகிய தனித்த அடையாளங்களால் எளிதில் அடையாளம் காணலாம். இதன் நிறமானது மெல்லிய நீல-பச்சை நிறத்திற்கு இடையில் இருக்கும் ஆங்காங்கே பச்சை மற்றும் ஊதா-நீல நிற திட்டுகள் இருக்கும். பெரிய மீன்கள் பொதுவாக தனியாக வாழ்வதைக் காணலாம், என்றாலும் ஆண்/பெண் ஜோடிகள் மற்றும் சிறிய குழுக்களும் காணப்படுகின்றன. [4] [5] [6]
வாழ்விடம்
தொகுசெங்கடல் முகத்துவாரத்தைச் சுற்றி ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையிலும், இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களின் சில பகுதிகளிலும் பெருந்திரளைகளைக் காணலாம். இளம் மீன்கள் பொதுவாக பவளப்பாறை நீரை ஒட்டிய ஆழமற்ற, மணல் திட்டுகளை ஒட்டிய பகுதிகளில் காணப்படுகிறன்றன. அதே சமயம் பெரிய மீன்கள் பெரும்பாலும் கடலின் ஆழமான பவளப்பாறைப் பகுதிகளில் காணப்படுகின்றன. [7] [8]
இனப்பெருக்கம்
தொகுபெருந்திரளை மீன்கள் நீண்ட காலம் வாழ்கின்றன. ஆனால் மிக மெதுவான இனப்பெருக்கம் விகிதம் உள்ளது. ஒரு மீனானது பாலியல் முதிர்ச்சி அடைய ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் ஆகின்றது. இவை சுமார் 30 ஆண்டுகள் உயிர் வாழ்கிறன. [6] இவை ஒரு இருபாலுயிரி ஆகும். இதில் சில மீன்கள் சுமார் 9 வயதில் ஆண் தன்மையைப் பெறுகின்றன. பாலின மாற்றத்தை கட்டுப்படுத்தும் காரணிகள் இன்னும் அறியப்படவில்லை. இவை பவளப் பாறைகளுக்கு அடியில் முட்டையிடுகின்றன.
பெருந்திரளை முட்டைகள் 0.65 மிமீ விட்டத்தில் கோள வடிவத்தில் நிறமற்று உள்ளன. முட்டையில் இருந்து வரும் குடம்பிகள் பவளப்பாறை வாழ்விடங்களில் அதன் அல்லது அருகில் வசிக்கின்றன. [6]
குறிப்புகள்
தொகு- ↑ Russell, B. (Grouper & Wrasse Specialist Group) (2004). "Cheilinus undulatus". IUCN Red List of Threatened Species 2004: e.T4592A11023949. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T4592A11023949.en. https://www.iucnredlist.org/species/4592/11023949. பார்த்த நாள்: 30 December 2019.
- ↑ Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "Cheilinus undulatus" in FishBase. April 2006 version.
- ↑ "மீன்களுக்குள் மறைந்திருக்கும் தமிழ்!". Hindu Tamil Thisai. 2023-06-04. பார்க்கப்பட்ட நாள் 2023-06-28.
- ↑ Chateau, Wantiez (December 2007). "Site fidelity and activity patterns of a humphead wrasse, Cheilinus undulatus (Labridae), as determined by acoustic telemetry". Environmental Biology of Fishes 80 (4): 503–508. doi:10.1007/s10641-006-9149-6. https://archive.org/details/sim_environmental-biology-of-fishes_2007-12_80_4/page/503.
- ↑ Weng, Kevin C.; Pedersen, Martin W.; Del Raye, Gen A.; Caselle, Jennifer E.; Gray, Andrew E. (April 29, 2015). "Umbrella species in marine systems: using the endangered humphead wrasse to conserve coral reefs". Endangered Species Research 27: 251–263. doi:10.3354/esr00663. பன்னாட்டுத் தர தொடர் எண்:1613-4796. https://www.int-res.com/articles/esr2015/27/n027p251.pdf.
- ↑ 6.0 6.1 6.2 Sadovy, Y.; Kulbicki, M.; Labrosse, P.; Letourneur, Y.; Lokani, P.; Donaldson, T.J. (September 2003). "The Humphead Wrasse, Cheilinus undulatus: synopsis of a threatened and poorly known giant coral reef fish". Reviews in Fish Biology and Fisheries 13 (3): 327–364. doi:10.1023/B:RFBF.0000033122.90679.97.
- ↑ Sluka, Robert D. (November 2005). "Humphead Wrasse (Cheilinus Undulatus) Abundance and Size Structure Among Coral Reef Habitats in Maldives". Atoll Research Bulletin (National Museum of Natural History (Smithsonian Institution)) 538: 192–198. doi:10.5479/si.00775630.538.189.
- ↑ Tupper, Mark (2007). "Identification of nursery habitats for commercially valuable humphead wrasse Cheilinus undulatus and large groupers (Pisces: Serranidae) in Palau". Marine Ecology Progress Series 332: 189–199. doi:10.3354/meps332189. Bibcode: 2007MEPS..332..189T.