பெரும்பரம்பு மகாதேவர் கோயில்

பெரும்பரம்பு மகாதேவர் கோயில் இந்தியாவில், கேரளாவில், மலப்புரம் மாவட்டத்தில் எடப்பாலில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவரான சிவன் மேற்கு நோக்கிய கருவறையில் உள்ளார். [1] கேரளாவில் உள்ள 108 சிவன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் பரசுராம முனிவரால் சிவனுக்காக அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. [2] [3] எடப்பால் - பரப்புரம் - அயங்கலம் சாலையில் எடப்பாலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. மூலவர் கருவறை இரண்டு நிலைகளைக் கொண்டு, குக்குடக்ருதி பாணியில் சதுர வடிவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை பரசுராமர் நிறுவியதாக நம்பப்படுகிறது.

மேற்குக் கோபுரம்

மேலும் பார்க்கவும்

தொகு

படத்தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "108 Siva Temples".
  2. "108 Shiva Temples created by Lord Parasurama in Kerala – Sanskriti - Hinduism and Indian Culture Website".
  3. "108 Shivalaya Nama Stotram - 108 Shivalaya Nama Stothra – Temples In India Information".