பெரும் பிரிக்கும் மலைத்தொடர்
பெரும் பிரிக்கும் மலைத்தொடர் (Great Dividing Range), அல்லது கிழக்கத்திய பீடபூமி (Eastern Highlands) ஆத்திரேலியாவின் மிக முதன்மையான மலைத் தொடராகும். இது உலகில் நிலப்பரப்பில் மூன்றாவது நீளமான மலைத்தொடராக விளங்குகின்றது. இது குயின்சுலாந்தின் வடகிழக்கு முனையிலுள்ள டௌயான் தீவிலிருந்து கிழக்குக் கடலோரத்தின் முழுமைக்கும் நீண்டு நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மாநிலங்கள் வழியே சென்று மேற்கு நோக்கித் திரும்பி மேற்கு விக்டோரியாவின் மத்திய சமவெளியான கிராம்பிளான் வரை 3,500 கிலோமீட்டர்கள் (2,175 mi) நீளத்திற்கு பரந்துள்ளது. இம்மலைத்தொடரின் அகலம் 160 km (100 mi) முதல் 300 km (190 mi) வரை வேறுபடுகின்றது.[2]
பெரும் பிரிக்கும் மலைத்தொடர் | |
---|---|
| |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | கொஸ்கியஸ்கோ மலை, பனிமிகு மலைகள் |
உயரம் | 2,228 m (7,310 அடி) |
ஆள்கூறு | 36°27′S 148°16′E / 36.450°S 148.267°E |
பரிமாணங்கள் | |
நீளம் | 3,500 km (2,200 mi) வடக்கு–தெற்கு |
புவியியல் | |
நாடு | ஆத்திரேலியா[1] |
மாநிலங்கள் | நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து and விக்டோரியா |
மாவட்டம் | ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம் |
தொடர் ஆள்கூறு | 25°S 147°E / 25°S 147°E |
நிலவியல் | |
பாறையின் வயது | காபனிபெரசு |
கடலோர தாழ்நிலங்களுக்கும் கிழக்கில் உள்ள உயர்நிலங்களுக்குமான கடும் உயர்வு ஆத்திரேலியாவின் வானிலையில் தாக்கமேற்படுத்தியுள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Australia.gov. "Australian Rocks and Mountains". Archived from the original on 15 சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 18 செப்டெம்பர் 2012.
- ↑ Shaw, John H., Collins Australian Encyclopedia, William Collins Pty Ltd., Sydney, 1984, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-217315-8
- ↑ Löffler, Ernst; A.J. Rose; Anneliese Löffler; Denis Warner (1983). Australia:Portrait of a Continent. Richmond, Victoria: Hutchinson Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-09-130460-1.
வெளி இணைப்புகள்
தொகுவிக்கிப்பயணத்தில் பெரும் பிரிக்கும் மலைத்தொடர் என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.