பெருவண்ணாமுழி அணை
பெருவண்ணாமுழி அணை (Peruvannamuzhi Dam) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், கோழிக்கோடு மாவட்டத்தில், செக்கிட்டிபாற ஊராட்சிக்கு உட்பட்ட பெருவண்ணாமுழியில் குட்டியாடி ஆற்றிக் குறுக்க கட்டபட்ட ஒரு அணையாகும். இது கோழிக்கோடு நகரிலிருந்து 55 கி.மீ தொலைவில் உள்ளது. இது குட்டியாடி நீர்ப்பாசன திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது [1] .
பெருவண்ணாமுழி அணை | |
---|---|
பெருவண்ணாமுழி அணையின் தோற்றம் | |
அதிகாரபூர்வ பெயர் | Kuttiyadi Dam |
புவியியல் ஆள்கூற்று | 11°35′47.1″N 75°49′25″E / 11.596417°N 75.82361°E |
திறந்தது | 1973 |
Upper dam and spillways | |
நீளம் | 170.69 மீட்டர் |
கீழ் அணை மற்றும் வழிகால் | |
வழிகால் அளவு | 120.52 M m3 |
இந்த அணையின் நீர்த்தேங்கும் பரப்பு சகிட்டத்தாரா மற்றும் கூராச்சுண்டு பஞ்சாயத்துகளில் அமைந்துள்ளது. இது கோழிக்கோடு மாவட்டதில் பிரபலமான சுற்றுலா தலமாகும். மலைப்பகுதியில் உள்ள இந்த அணையில் விசைப்படகு, துடுப்புப்படகு போன்ற வசதிகள் உள்ளன. இங்கு முதலைப் பண்ணை ஒன்றும் உள்ளது. பெருவண்ணாமுழி வனவிலங்கு சரணாலயம் மலபார் வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது.[2] [3] இப்பகுதியின் விடுதலைப்போராட்ட வீரரின் நினைவாக இங்கு ஸ்மரகதோட்டம் என்ற பெயரிலான பூங்காவை அமைத்துள்ளனர்.
மின் உற்பத்தி
தொகுஇந்த அணைநீரைப் பயன்படுத்தி எதிர்காலத்தில், 6 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க கேரள மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. ஆண்டு உற்பத்தி 24.7 MU ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது [4] .
போக்குவரத்து
தொகுகோழிக்கோடு மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத் தலமான பெருவண்ணாமுழிக்குச் செல்ல,
பேருந்து வழித்தடம்: கோழிக்கோடு புதிய பேருந்து நிலையத்திலிருந்து பூழிதோடு / பெருவண்ணாமுரி பேருந்து. (55 கி.மீ) </br>
படவரிசை
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Kuttiyadi(Id) Dam D03014-". www.india-wris.nrsc.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-25.
- ↑ "KUTTIYADI IRRIGATION PROJECT-". www.idrb.kerala.gov.in.
- ↑ "Malabar Wildlife Sanctuary -". www.forest.kerala.gov.in.
- ↑ "Peruvannamuzhi SHEP-". www.kseb.in.