பெர்காமோ பேரங்காடி
பெர்காமோ பேரங்காடி (Bergamo shopping mall) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னை நகரத்தின் நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகமாகும். காதர் நவாசு கான் சாலையில் 30000 சதுர அடி பரப்பளவில் இப்பேரங்காடி அமைந்துள்ளது.[1][2] 2012 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் சென்னையில் பெர்காமோ பேரங்காடி திறக்கப்பட்டது.[3] பிரான்சு நாட்டின் பாரிசு நகரை தலைமையிடமாகக் கொண்ட இலூயிசு உய்ட்டன் என்ற ஆடம்பரமான கடை இதன் முதல் கடையாகத் திறக்கப்பட்டது.[4] பிரபலமான டி.எசு.பி. கட்டடக் கலை நிறுவனம் பெர்காமோ பேரங்காடியை வடிவமைத்தது. சென்னையைச் சேர்ந்த கே.கே.ஏ. கட்டுமான நிறுவனத்தினர் 10 கோடி ரூபாய் செலவில் அங்காடியை கட்டி முடித்தனர்.[5] இத்தாலிய நகரமான பெர்காமோவின் பெயர் சூட்டப்பட்டிருக்கும்[5] இந்த பேரங்காடி சென்னையின் முதல் ஆடம்பரமான பேரங்காடியாகவும்[5][6] இந்தியாவின் மூன்றாவது ஆடம்பர பேரங்காடியாகவும் கருதப்படுகிறது.[7] 1600 முதல் 2000 சதுர அடிகள் வரை பரப்பளவு கொண்ட 24 கடைகள் பேரங்காடியில் உள்ளன.[8] இங்குள்ள வெள்ளை நிற மூன்று அடுக்கு கட்டடம் பாரம்பரிய இத்தாலிய கட்டிடக்கலையின் பாதிப்போடு உருவாக்கப்பட்டுள்ளது.[6][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bergamo (shopping mall)".
- ↑ "Bergamo Chennai".
- ↑ "Bergamo Details".
- ↑ Reddy, T. Krithika (6 August 2012). "Bagful of beauty". தி இந்து. http://www.thehindu.com/life-and-style/leisure/article3734510.ece. பார்த்த நாள்: 3 November 2012.
- ↑ 5.0 5.1 5.2 "Bergamo shopping centre in Chennai". தி இந்து. 3 June 2009 இம் மூலத்தில் இருந்து 7 ஜூன் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090607192640/http://www.hindu.com/2009/06/03/stories/2009060351181400.htm. பார்த்த நாள்: 3 November 2012.
- ↑ 6.0 6.1 Mathai, Kamini (4 August 2012). "Stylish in the south". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா The Crest Edition இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121027032607/http://www.timescrest.com/life/stylish-in-the-south-8451. பார்த்த நாள்: 3 November 2012.
- ↑ "Luxury mall in Chennai". The Hindu Business Line. 31 May 2009. http://www.thehindubusinessline.in/iw/2009/05/31/stories/2009053150541500.htm. பார்த்த நாள்: 3 November 2012.
- ↑ Aparna Ramalingam (24 September 2009). "Rentals in city's high streets". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Chennai) இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103135629/http://articles.timesofindia.indiatimes.com/2009-09-24/chennai/28102171_1_luxury-brands-high-streets-rentals. பார்த்த நாள்: 3 November 2012.
- ↑ Indulekha Aravind (27 October 2012). "Chennai swank". Business Standard. http://www.business-standard.com/india/news/chennai-swank/490809/. பார்த்த நாள்: 3 November 2012.