பெர்ச் நடவடிக்கை
பெர்ச் நடவடிக்கை (Operation Perch) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதில் பிரிட்டானியத் தரைப்படை நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைத் கைப்பற்ற முயன்று தோற்றது.
பெர்ச் நடவடிக்கை | |||||||
---|---|---|---|---|---|---|---|
கான் சண்டையின் பகுதி | |||||||
பெர்ச் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளா செண்டார் 4 வகை டாங்கு |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம் | நாசி ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பெர்னார்ட் மோண்ட்கோமரி மைல்ஸ் டெம்சி கெரார்ட் பக்னால் | லியோ கெய்ர் வோன் ஷ்வெப்பென்பர்க் செப்ப் டயட்ரிக் |
||||||
பலம் | |||||||
1 கவச டிவிசன் 2 காலாட்படை டிவிசன்கள் 2 கவச பிரிகேட்கள் | 3 கவச டிவிசன்கள் 1 காலாட்படை டிவிசன் 1 கனரக டாங்கு பட்டாலியன் |
||||||
இழப்புகள் | |||||||
தெரியவில்லை | தெரியவில்லை |
பிரான்சு மீதான நேச நாட்டு கடல்வழிப் படையெடுப்பு நார்மாண்டியில் ஜூன் 6, 1944ல் தொடங்கியது. அதன் இலக்குகளில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுவதாகும். பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேற கான் நகரைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது அவசியம் என்பதால் அதனைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் தொடர் கான் சண்டை முயற்சிகளை மேற்கொண்டன. அவற்றுள் முதலாவது பெர்ச் நடவடிக்கை. நார்மாண்டிப் படையிறக்கத்துக்கு மறுநாள் (ஜூன் 7) இந்த தாக்குதல் தொடங்கியது.
பிரிட்டானிய 30வது மற்றும் 1வது கோர்கள் கான் நகரை சுற்றி வளைத்து கைப்பற்ற முற்பட்டன. நகரின் மேற்குப் பகுதியில் 30வது கோரும் கிழக்குப் பகுதியில் 1வது கோரும் தாக்கின. ஆனால் ஜெர்மானியப் பாதுகாப்புப் படைகளின் கடும் எதிர்ப்பினால் இரு முன்னேற்றங்களும் தடைபட்டன. ஒரு வார காலம் கடும் சண்டைக்குப் பிறகு பெர்ச் நடவடிக்கை கைவிடப்பட்டது. இரு தரப்பினருக்கும் பெரும் இழப்புகள் ஏற்பட்டன. கான் நகர் ஜெர்மானிய வசமே இருந்தது.
மேற்கோள்கள்
தொகு