பெர்னார்டு ஆல்டம்

ஜோஹன் பெர்னார்ட் தியோடர் ஆல்டம் (Johann Bernard Theodor Altum; 31 சனவரி 1824, முன்ஸ்டர், வெஸ்ட்பாலியா மாகாணம் - 1 பிப்ரவரி 1900, எபர்ஸ்வால்ட்) செருமனி நாட்டைச் சார்ந்த கத்தோலிக்கப் பாதிரியார், விலங்கியல் நிபுணர் மற்றும் வன விஞ்ஞானி ஆவார்.

பெர்னார்டு ஆல்டம்

பின்புலம்

தொகு

ஆல்டம், காலணி தயாரிப்பாளரான பெர்னார்ட் தியோடர் ஆல்டம் மற்றும் முன்ஸ்டரின் அன்னா கெர்ட்ரூட் அன்டோனெட் ஹுடர் ஆகியோருக்கு மகனாப் பிறந்தார். உள்ளூர் தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்விக்குப்பின் பவுலினம் ஜிம்னாசியத்தில் (முன்ஸ்டர்) சேர்ந்து 1845ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். ஆல்டம் முன்ஸ்டரில் தத்துவம் மற்றும் இறையியலைப் படித்தார். பின்னர் 1849இல் ஒர் பாதிரியாராக நியமிக்கப்பட்டார். பின்னர், இவரது ஆர்வம் விலங்கியலை நோக்கிச் சென்றது. இவருக்கு விலங்கியலை ஜோகன்னஸின் பயிற்றுவித்தவர்கள் பெர்லினில் பீட்டர் முல்லர் மற்றும் மார்ட்டின் லிச்சென்ஸ்டைன் ஆவார்கள். 1855 ஆம் ஆண்டில் ஹோமர், எஸ்கிலஸ், சோஃபோக்கிள்ஸ் மற்றும் யூரிப்பிடிஸை ஒப்பிட்டு வழங்கிய ஆய்வுகளுக்காக முனைவர் பட்டம் பெற்றார். 1859 முதல் அவர் முன்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தார். பின்னர் 1869ஆம் ஆண்டில் ஜூலியஸ் தியோடர் கிறிஸ்டியன் ராட்ஸெபர்க்கினைத் தொடர்ந்து எபர்ஸ்வால்டில் உள்ள வனவியல் பயிற்சி நிறுவனத்துக்கு மாற்றப்பட்டார்.[1]

இவரது ஆரம்பக்கால ஆராய்ச்சியானது பாலூட்டிகள் மற்றும் பறவைகளை முதன்மையாகக் கொண்டதாக இருந்தது. எபர்ஸ்வால்டேவுக்குச் சென்றபின், அவரது ஆய்வுகள் பெரும்பாலும் வன பூச்சியியல் துறையிலிருந்தன.[2]

 
ஆல்டம், அமர்ந்திருப்பவர்களில் இடமிருந்து மூன்றாவது, பெர்லின் விவசாய, வன அமைச்சகத்தின், வாரிய தேர்வின்போது, அக்டோபர் 1893)

1893 முதல் 1900 வரை அவர் செருமனி பறவை இயல் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார்.

1935 ஆம் ஆண்டில் ஆல்டமின் 1868 ஆம் ஆண்டு எழுதிய டெர் வோகல் அண்ட் சீன் லெபனைப் குறித்து எர்ன்ஸ்ட் மேயர் எழுதினார். இதில் எலியட் ஹோவர்டால் 1920ல் இங்கிலாந்து பறவையியலாளர்களின் கருத்துக்களான பறவைகளின் ஆளுமை எல்லையினை குறிப்பிட்டு இருந்தார். உணவு கிடைப்பதற்கான பிராந்திய அளவின் உறவு மற்றும் உயிரினங்களுக்கிடையேயான போட்டி அல்லது பற்றாக்குறை எவ்வாறு பிராந்திய மோதலை அல்லது இரண்டு இனங்களுக்கு இடையே தீர்மானிக்கப்படுவதை ஆய்வு செய்தது.[1] ஆல்டமின் கருத்துக்கள் அவரது புத்தகம் வெளிவந்தபோது ஆல்பிரட் ப்ரெம் உட்பட பலராலும் விமர்சனத்திற்கு உள்ளான போதும் எவ்வித சலனமும் இன்றி ஓயாத படைப்பாளியாக இருந்தார். ​​ ஏப்ரல் 6, 1868இல் பெர்லின் பறவையியலாளர்கள் கூட்டத்தில், அல்தூமின் பணி இறையியல் மற்றும் தொலைத்தொடர்பு சார்ந்ததாகவும், விலங்கியல் பற்றிய நவீன புரிதலை எதிர்ப்பதாகவும், பறவைகள் மற்றும் விலங்குகளை (உள்ளுணர்வால் இயக்கப்படும்) இயந்திரங்களாக மாற்றுவதாகவும், அவற்றின் நுண்ணறிவினை அங்கீகரிக்காமல் உள்ளதைக் குறிப்பிட்டு, இதன் மூலம் பறவைகள் குறித்த ஆய்வின் மதிப்பினைக் குறைப்பதாகக் கூறினார்.[3]

பணிகள்

தொகு
  • Homeri cum Aeschyli, Sophoclis, Euripidis comparantur, (dissertation), Berlin 1855.
  • Winke zur Hebung des zoologischen Unterrichts (a zoology instruction manual), Münster 1863.
  • Die Säugetiere des Münsterlands, Münster (Mammals of "Münster country"), 1867.
  • Der Vogel und sein Leben, Münster 1868 (Birds and their lives); published in several editions, 7th edition 1903.
  • Forstzoologie (Forest zoology; volume 1: mammals, volume 2: birds, volume 3: insects; general insects and beetles).
    • I. Säugethiere. Second improved and enlarged edition, published by Julius Springer, Berlin 1876.
    • II. Vögel. published by Julius Springer, Berlin 1873.
    • III. Insecten. 1. Abth. Allgemeines und Käfer. Second improved and enlarged edition, published by Julius Springer, Berlin 1881.[4]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்னார்டு_ஆல்டம்&oldid=3027848" இலிருந்து மீள்விக்கப்பட்டது