பெர்னார்டோ உரோசெல்லி

உருகுவே நாடு சதுரங்க வீரர்

பெர்னார்டோ உரோசெல்லி மைல்கே (Bernardo Roselli Mailhe) உருகுவே நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1994 ஆம் ஆண்டு பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.[1]

பெர்னார்டோ உரோசெல்லி
Bernardo Roselli
2019 அண்டோரா திறந்தநிலை போட்டியில் உரோசெல்லி
முழுப் பெயர்பெர்னார்டோ உரோசெல்லி மைல்கே
நாடுஉருகுவை
பிறப்பு17 செப்டம்பர் 1965 (1965-09-17) (அகவை 58)
கார்மெலோ, உருகுவே
பட்டம்பன்னாட்டு மாசுட்டர் (1994)
பிடே தரவுகோள்2421 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2471 (மே 2019)

1984 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பெர்னார்டோ உரோசெல்லி பதின்மூன்று முறை உருகுவே சதுரங்க வெற்றியாளர் போட்டிகளை வென்றார்.[2] மேலும் சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் பதினொரு முறை (1986-2014) உருகுவேயைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[3] இவரது சதுரங்க வாழ்க்கையின் தொடக்கத்தில், 1985 ஆம் ஆண்டு கொரியண்ட்டு நகரில் நடைபெற்ற 12 ஆவது தென் அமெரிக்க மண்டலப் போட்டியில் 15வது இடத்தைப் பிடித்தார்.[4]

2002 ஆம் ஆண்டில் ரிபப்ளிகா அர்கெந்தினா சதுரங்க மாசுட்டர் போட்டியின் ஐந்தாவது பதிப்பில் செருமன் கணினி நிரலான இயர்க்சு 8.0 நிரலை விட உரோசெல்லி முதல் இடத்தைப் பிடித்தார்.[5]

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு

  • Bernardo Roselli Mailhe rating card at FIDE
  • Bernardo Roselli Mailhe player profile and games at Chessgames.com
  • Bernardo Roselli Mailhe chess games at 365Chess.com
  • Bernardo Roselli Mailhe FIDE rating history at OlimpBase.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்னார்டோ_உரோசெல்லி&oldid=3859096" இலிருந்து மீள்விக்கப்பட்டது