பெர்னாவோ நுனிஸ்
பெர்னாவோ நுனிஸ் (Fernao Nuniz) ஒரு போத்துக்கீசப் பயணியும், வரலாற்று எழுத்தாளரும், குதிரை வணிகரும் ஆவார். 1535 - 1537 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அக்காலத்தில் விசயநகரப் பேரரசின் தலைநகராக இருந்த விசயநகரத்தில் தங்கி இருந்தார். இவருடைய எழுத்துக்கள் அக்காலத்தின் விசயநகரம் பற்றிய பல சுவையான விபரங்களைத் தருகின்றன[1] பாரிய அரண்கள், காவல் கோபுரங்கள், பாதுகாப்புச் சுவர்கள் போன்றவற்றின் கட்டுமான வேலைகள் குறித்த தகவல்களும் இவற்றுள் அடங்குகின்றன. இவற்றில் இருந்து இத் தலைநகரத்தின் எல்லைகள் இரண்டாம் புக்காராயர், முதலாம் தேவராயர் ஆகியோர் காலத்தில் விரிவாக்கப்பட்டது தெரியவருகிறது.
குறிப்புகள்
தொகு- ↑ Robert Sewell, Fernão Nunes, Domingos Paes, "A forgotten empire: Vijayanagar; a contribution to the history of India" (Includes a translation of "Chronica dos reis de Bisnaga," from Domingos Paes and Fernao Nuniz from 1520 and 1535 respectively), Adamant Media Corporation, 1982, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0543925889
உசாத்துணைகள்
தொகு- கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, History of South India, From Prehistoric times to fall of Vijayanagar, 1955, OUP, புதுடில்லி (மீள்பதிப்பு 2002) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-560686-8
- ராபர்ட் சீவெல், பெர்னாவோ நுனிஸ், டொமிங்கோ பயஸ், "A forgotten empire: Vijayanagar; a contribution to the history of India" (Includes a translation of "Chronica dos reis de Bisnaga," from Domingos Paes and Fernao Nuniz from 1520 and 1535 respectively), Adamant Media Corporation, 1982, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0543925889
- ராதாகமல் முகர்ஜி, "A history of Indian civilization", Hind Kitabs, 1958 (refere Paes)
- எச். வி. சிறீனிவாச மூர்த்தி, ஆர். ராமகிருஷ்ணன், "A history of Karnataka, from the earliest times to the present day", எஸ். சந்த், 1977