பெர்னேம் (Pernem) பெட்னே எனவும் அழைக்கப்படும் இது இந்தியாவின் வடக்கு கோவாவிலுள்ள ஒரு நகரமும், நகராட்சி அமைப்புமாகும்.

பெட்னே
நகரம் / வட்டம்
பெட்னே is located in கோவா
பெட்னே
பெட்னே
பெட்னே is located in இந்தியா
பெட்னே
பெட்னே
ஆள்கூறுகள்: 15°43′00″N 73°47′49″E / 15.716740°N 73.796996°E / 15.716740; 73.796996
நாடு இந்தியா
மாநிலம்கோவா
மாவட்டம்வடக்கு கோவா
நிறுவப்பட்டது1800களின் ஆரம்பம்
அரசு
 • சட்டமன்ற உறுப்பினர்மனோகர் (பாபு) அஜ்கோங்கர்
பரப்பளவு
 • மொத்தம்4 km2 (2 sq mi)
ஏற்றம்6 m (20 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,021
 • அடர்த்தி1,300/km2 (3,300/sq mi)
இனங்கள்பெட்னேகர், பெர்னெம்கர்
மொழிகள்
 • அலுவல்கொங்கனி
 • மேலும் பேசுவதுபெட்னேக்கரி, ஆங்கிலம், போர்த்துகேசியம், மராத்தி,
பிராந்தியங்கள்[2]
 • பெரும்பான்மைஇந்து சமயம் 93.13%
 • சிறுபான்மைகிறிஸ்தவம் 5.08%
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சர் குறியீடு
403512
தொலைபேசி குறியீடு0832

நிலவியல்

தொகு

கோவாவின் பன்னிரண்டு துணை மாவட்டங்களில் பெர்னேமும் ஒன்றாகும். இதன் துணை மாவட்டத்தில் இருபது கிராம பஞ்சாயத்துகளும் ஒரு நகராட்சியும் உள்ளன. பெர்னேம் துணை மாவட்டம் வடக்கே சிந்துதுர்காவின் வெங்குர்லா மற்றும் சாவந்த்வாடி துணை மாவட்டங்கள், கிழக்கில் சிந்துதுர்காவின் தோடாமார்க் துணை மாவட்டம், தெற்கே பார்தெசு மற்றும் பிச்சோலிம் மற்றும் மேற்கில் அரபிக்கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

அகர்வாடோ, அலோர்னா, அம்பெரெம், அரம்போல், கன்சர்வோர்னெம், காசுனெம், சாண்டல், சோப்தெம், கோர்காவோ, தர்கலிம், இப்ராம்பூர், மாண்ட்ரெம், மோர்ஜிம், மோபா, ஓசோரிம், பாலியம், பார்செம், பெட்னே, போரோஸ்கோடெம், கியூரிம் போன்றவை இப்பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களாகும்.

இந்த ஊர் சர்மேலில் உள்ள மௌலி கோயில் பகுதியிலும், மால்பேயில் உள்ள முல்விர் கோயில் பகுதியிலும் இரண்டு அருவிகளைக் கொண்டுள்ளது.

புள்ளிவிவரங்கள்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் நகராட்சி மன்றத்தில் 5,021 மக்கள் தொகை உள்ளது. அதில் 2,557 ஆண்களும், 2,464 பெண்களும் அடங்குவர். 0-6 வயதுடைய குழந்தைகள் 402, மொத்தத்தில் 8.01%. கோவா மாநில சராசரி 942 உடன் ஒப்பிடும்போது பெண் பாலின விகிதம் 964 ஆகும். கோவா மாநில சராசரி 942 உடன் ஒப்பிடும்போது குழந்தை பாலின விகிதம் 836 ஆகும். கல்வியறிவு விகிதம் 91.19% ஆகும். இது மாநில சராசரியான 88.70% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 94.65% ஆகவும், பெண் கல்வியறிவு விகிதம் 87.64% ஆகவும் உள்ளது.

மதம்

தொகு

இக்ரேஜா டி சாவோ ஜோஸ்

தொகு

1852 ஆம் ஆண்டில் போர்த்துகீசியர்கள் வெற்றிகரமாக நோவா கான்கிஸ்டடோர் பிரச்சாரத்திற்குப் பிறகு இங்கு ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. இது 1855 சனவரி 2 அன்று ஒரு கிளைப்பிரிவாக உயர்த்தப்பட்டது. புனித சூசையப்பர் தேவாலயம் 1864 இல் புனரமைக்கப்பட்டு 2002 இல் புதுப்பிக்கப்பட்டது. 11 சிறிய கிறிஸ்தவ சமூகங்களை உள்ளடக்கிய 5 துணைகிளைகளையும் இதுகொண்டுள்ளது. ,

இந்துப் பண்டிகைகள்

தொகு

தசரா இங்கு ஒரு பிரபலமான திருவிழாவாகும். திருவிழா 5 நாட்கள் நீடிக்கும், இது கோஜகிரி பூர்ணிமாவில் முடிகிறது. கோஜகிரி பூர்ணிமா நாளில் கோவாவின் மிகப்பெரிய விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்படுகிறது. கோயில்களில் ஆதிஸ்தான் மங்கர், பகவதி, ராவல்நாத், சடேரி, குள்ளம், மௌலி, கௌதமேசுவர், நாராயணன், முல்விர், மாருதி மற்றும் சிறீ சோம்நாத் ஆகியவை தெய்வங்களின் சிலைகள் எழுப்பப்பட்டுள்ளது.

பொருளாதாரம்

தொகு

துணை மாவட்டத்தில் பெரிய வருமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. துணை மாவட்டச் சந்தை பெரிதாக இல்லை. பெரும்பாலான மக்கள் வேலைவாய்ப்புக்காக மற்ற பகுதிகளை நம்பியிருக்கிறார்கள். பெட்னே சுமார் 200 சிறு நிறுவனங்களை வழங்குகிறது. வியாழக்கிழமை வாராந்திர சந்தை வட கோவாவில் இரண்டாவது பெரியது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Maps, Weather, and Airports for Pedne, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 2019-07-09.
  2. http://www.census2011.co.in/data/town/803241-pernem-goa.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்னேம்&oldid=3712610" இலிருந்து மீள்விக்கப்பட்டது