பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா

புனிதர்களான பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா (மரபுப்படி இறப்பு: 7 மார்ச் 203) என்பவர்கள் 3ஆம் நூற்றாண்டின் கிறித்தவ மறைசாட்சிகள் ஆவர். பெர்பேத்துவா (பிறப்பு சுமார் 181) என்பவர் 22 அகைவையுடைய, திருமணமான, உயர்குடியினைச்சேர்ந்த பால் குடி மறவா குழந்தையின் தாய் ஆவார். இவரோடு மறைசாட்சியாக மறித்த இவரின் அடிமைப்பெண்ணான பெலிசித்தா கருவுற்றிருந்தார். இவர்கள் இருவரும் ஆப்பிரிக்காவின் கார்தேஜ் நகரில் சுபேடிமுஸ் சேவேருஸின் ஆட்சியில் மறைசாட்சிகளாக கொல்லப்பட்டனர். The Passion of St. Perpetua, St. Felicitas, and their Companions என்னும் நூல் இவர்களின் மறைசாட்சியத்தினை விவரிக்கும் நூலாகும். கத்தோலிக்க திருச்சபையில் திருப்பலியில் பெயர் குறிப்பிடப்படும் புனிதர்களுள் இவர்களும் அடங்குவர்.

புனிதர்களான
பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா
கார்தேஜ் நகரின் புனித பெர்பேத்துவாவின் (வெர்சான் அன்னை தேவாலயம், பிரான்ஸ், 19 ஆம் நூற்றாண்டு) வேலைப்பாடு மிகுந்த கண்ணாடி சாளரம். அவரது இடப்புறத்தில் புனித பெலிசித்தா
மறைசாட்சியர்
இறப்புசுமார் 203
கார்தேஜ், Roman Province of Africa (தற்போது துனீசியாவில்)
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம்
திருவிழாகத்தோலிக்க திருச்சபை: மார்ச் 7 கிழக்கு மரபுவழி திருச்சபை: பெப்ரவரி 1
பாதுகாவல்தாய்மார்கள், கருவுற்றிருக்கும் தாய்மார்கள், கால்நடை வளர்ப்பவர், பண்ணையாட்கள், கசாப்புக்காரர்கள், கார்தேஜ், காத்தலோனியா


பெர்பேத்துவா 203இல் நடந்த வேத கலாபணையின் போது தான் கொல்லப்படுவது உறுதி எனத்தெரிந்து கிறித்தவத்தினை தழுவினார். இவரைப்போன்றே இவரின் சகோதரரும் மனம் மாறினார். இதனால் இவரின் தந்தை இவரை மிகவும் அதிகமாக் வதைத்தார். இவரும் இவருடன் மூவரும் கைதுசெய்யப்பட்டனர். சிறையிலடைக்கப்படுவதற்கு முன் இவர் திருமுழுக்கு பெற்றார். இவரோடு கருவுற்றிருந்த பெலிசித்தாவும் சிறையில் அடைக்கப்பட்டார். கருவில் இருக்கும் குழந்தையோடு சாக விரும்பாமல், கடவுளிடம் வேண்டி அந்த இரவே பெலிசித்தா குழந்தை பெற்றெடுத்தார் என்பர். பெர்பேத்துவாவின் தந்தை எவ்வள்வோ இரந்து மன்றாடியும் அவரின் சொல்லுக்கு இணங்கி கிறித்துவ மறையினை கைவிட மறுத்து விட்டார். இதனால் இவ்விருவரையும் மிருகங்களுக்கு இரையாக்கினர்.